கணக்கியல் மற்றும் வர்த்தக துறையில் சான்றிதழ் !
“கல்வியால் உயர்வோம்” என்ற கோட்பாட்டுடன் கல்விக்கு ஊக்கம் கொடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டதே “உமா புலமை” பரிசில் திட்டம். இத்திட்டமானது எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் கிழக்கு பல்கலைகழகத்தில் கணக்கியல் துறையில் கல்வி பயின்றுவரும் செல்வி. தர்சனா என்ற மாணவி, கணக்கியல் மற்றும் வணிகத்தில் டிப்ளமோ பட்டத்தை பிறிதாக கற்றதன் மூலம் சித்திபெற்று அதற்கான சான்றிதழையும் பெற்று கொண்டுள்ளார்.
இவ்மாணவியுடன் இணைத்து இதுவரை இருவர் சித்தியடைந்துள்ளனர். ஏற்கனவே தவராஜா திவ்ய பிரியா என்ற மாணவி சட்டத்துறையில் சித்தியடைந்து மூத்த சட்டத்தரணியுடன் தற்போது பணியாற்றி வருகின்றார்.
இவ்வாறாக கல்விபயிலும், ஏனைய மாணவ, மாணவியரும் சிறப்பு சித்திகள் பெற்று வீட்டுக்கும், ஊருக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் நற்பெயரையும், நல் சமூக எண்ணங்களையும் உருவாக்கிட வேண்டும்.
தூர நோக்குடன் எம்மால் முன்னெடுக்கப்பட்ட உமா புலமை பரிசில் கல்வி திட்டத்திற்கு கரம் கொடுத்து ஊக்கமளித்துவரும் அத்தனை புலம்பெயர் உறவுகளுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும். எமது இந்த அரிய திட்டத்திற்காக புலம்பெயர் வாழ் இளம் சமூகமும் ஆக்கமும், ஊக்கமும் தந்து அனுசரனை வழங்க முன்வந்துள்ளதுடன் வழங்கியும் வருகின்றனர். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நல்ல சிந்தனையுடன் அடுத்த தலைமுறையும் ஊக்கம் தருவது ஒர் ஆரோக்கியமே.
“உங்களால் இந்த உலகை மாற்றப் பயன்படுத்த முடிந்த மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வியே”.
-நெல்சன் மண்டேலா