2022-02-10

புதல்வியின் பிறந்ததினத்தில் அறப்பணிகள் செய்து மகிழ்வுறும் தந்தை!

புலம்பெயர்ந்தாலும் உணர்வு மாறாத உள்ளத்துடன் எம்புலம் பெயர் உறவுகள் பிள்ளைகளின் பிறந்ததினம், திருமணதினம், பெற்றோர் உறவுகள் நினைவுதினம் என்று என்னவொரு நிகழ்வாக இருந்தாலும் அதன் ஆடம்பரங்களை தவிர்த்து, அந்த விடயங்களிற்காக செலவு செய்யும் பணத்தை “அறம்”சார்ந்த பணிகளிற்காக செலவு செய்து “ஏழையின் சிரிப்பில் இன்பத்தை காண்போம்” என்ற நற்சிந்தனை கொண்ட மனிதர்களால்தான் இன்றளவும் உலகம் வாழ்கின்றது.
 
இந்த தூய நோக்கம் சிந்தனை எண்ணம் கொண்டவர்கள் சொற்ப சிலரே, அவர்களில் ஒருவராக யாழ் அச்சுவேலி பத்தைமேனியை சொந்த இடமாக கொண்டவரும் தற்போது சுவிஸ் நாட்டில் வசித்துவரும் திரு. இராசேந்திரம் திகழ்கின்றார்.
 
பல்வேறு பணிகளிற்காக தனது உழைப்பின் சிறு பகுதியை செலவு செய்து வருவதுடன், தனது மகளின் (கீர்த்தனா) பிறந்ததினத்தில் ஆண்டு தோறும் எமது நிறுவனமான “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” ஊடாக அறபணிகள் செய்து வருகின்றார்.
 
அவ்வகையில் இன்றையதினம் வியாழக்கிழமை(10.02.2022) செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட நேரியகுளம், செட்டிகுளம் 2ம் பாம், முகத்தான்குளம், கங்கன்குளம், முட்டையிட்டகுளம் போன்ற பகுதிகளில் வறுமையிலும் தனிமையில் வாடும் பெற்றோர், உணவுக்காக துன்பப்படும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உணவு பொருட்கள் UF இன் செயலாளர் திருமதி. ஐஸ்மின் ஹன்றி பெரேரா அவர்களால் வழங்கப்பட்டது.
 
இதேவேளை யுத்தத்தில் பிள்ளைகளை தொலைத்த நிலையில் செட்டிகுளம் காந்திநகர் கிராமத்தில் வசித்து வரும் அன்னைக்கான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. போரின்போது இருபிள்ளைகள் (கழக உறுப்பினர்கள்) காணாமல் போன நிலையில், தனிமையில் வாடும் தாய்க்கான வாழ்வாதார சுயதொழில் ஊக்குவிப்பாக 20,000 ரூபா பெறுமதியான கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது.
 
இவற்றுக்கான முழுமையான செலவையும் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் திரு இராசேந்திரம் அவர்கள் கனடாவில் வசித்து வரும் தனது மகள் செல்வி. கீர்த்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு நல்லியிருந்தார். எமது நிறுவனம் UFமுன்னெடுத்து வரும் அறபணிகளிற்காக அற்பணிப்புடன் ஒத்துழைப்பும், ஊக்கமும், ஆக்கமும் வழங்கிவரும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றியும்.
 
இன்று பிறந்தநாள் காணும் செல்வி. இராசேந்திரம் கீர்த்தனா எல்லா வழங்களும் நலங்களும் பெற்று இனிதே வாழ வேண்டும் என உமாமகேஸ்வரன் பவுண்டேசன் வாழ்த்துகின்றது. இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்.