2022-02-18

மட்டக்களப்பு சக்தி இல்லம் சிறுமிகள் அமரர். உமாமகேஸ்வரன் ஜனனதினத்தில்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சிறுமிகள் இல்லத்தில் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் 77 வது ஜனனதினம் இன்று வெள்ளிக்கிழமை (18,02, 2022) கொண்டாடப்பட்டது.
 
“உமா மகேஸ்வரன் பவுண்டேசன்” ஆகிய எமது நிறுவனம் அமரர்.க. உமா மகேஸ்வரன் அவர்களின் ஜனன தினத்தில் ஆண்டுதோறும் என்ன மாதந்தோறும் கல்வி, சமூக, முதியோர், சிறுவர், சிறுமிய நலன், வாழ்வாதார, சுயதொழில் ஊக்குவிப்பு என்று பல்வேறு உதவிகளை எமது நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
 
நாம் முன்னெடுக்கும் சமூக பணிக்கான முழுமையான பங்களிப்பினை எமது புலம்பெயர் மக்களே வழங்கி வருகின்றனர். இன்றைய இந்த நிகழ்வுக்கான அனுசரனையை சுவிஸ் நாட்டில் வசித்து வரும் திரு இரதீஸ்வரன் (தீபன்) அவர்கள் வழங்கியிருந்தார். அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றியும்.