2022-02-18

உமா மகேஸ்வரன் முன்பள்ளியில் ஜனன தின நிகழ்வு!

வவுனியாவில் அமையபெற்றுள்ள உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் க. உமாமகேஸ்வரன் அவர்களின் 77வது ஜனனதின நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18.02.2022)சிறப்பாக இடம்பெற்றது.
 
ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் ஜனனதின நிகழ்வுகள் இவ்வாண்டும் சிறப்பாக இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியை திருமதி. மீனா குணசீலன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் உட்பட சமூக நலன் விரும்பிகள் பங்கு கொண்டனர்.
 
இவ்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக “உமாமகேஸ்வரன் பவுண்டேசனின்” உபதலைவர்களில் ஒருவரான திரு. கிங்ஸிலி சுவாம்பிள்ளை (ரஞ்சன்) அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் சிறார்களிற்கான அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி மகிழ்வித்தார்.
 
இவ் நிகழ்விற்கான முழுமையான அனுசரனையை சுவிஸ் நாட்டில் வசித்துவரும் திரு. இராசேந்திரம் மற்றும் திரு ரதீஸ்வரன் (தீபன்) கூட்டாக இணைந்து வழங்கியிருந்தனர், தொடர்ச்சியாக UF முன்னெடுத்து வரும் சமூக பணிக்காக உதவி புரிந்துவரும் அனைத்து அன்புள்ளங்களிற்கும் எமது வாழ்த்துக்களும் நன்றியும்.