2022-02-18

உமா ஜனனதினத்தில் பாடசாலைக்கான கணனி கையளிப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட நீர்வேலி தெற்கு தமிழகலவன் பாடசாலை நிர்வாகம் UF இடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மேற்படி பாடசாலைக்கான கணனியும் அதற்குரிய உபகரணங்களும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(18.02.2022)உமா மகேஸ்வரன் அவர்களின் 77வது ஜனன தினத்தில் வழங்கப்பட்டது.
 
உமா மகேஸ்வரன் பவுண்டேசனின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. சிவம் அவர்களால் 128,000 ரூபா பெறுமதியான கணனியும் அதற்குரிய உப பொருட்களும் பாடசாலை அதிபர் திரு. கெளரீசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
இவ் நிகழ்வில் மேற்படி பாடசாலையின் பழைய மாணவியும் நீர்வேலி அத்தியார் இந்து பாடசாலையின் உபதலைமை ஆசிரியருமான திருமதி. விஜயா ஜெயக்குமார் அவர்களும் பிரசன்னமாகியிருந்தார்.
 
இதற்கான நிதி அனுசரணையை பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அன்பர் ஒருவர் நல்கியிருந்தார். அவரது வேண்டுகோளிற்கு ஏற்ப பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு எத்தனையோ உதவிகளை எமது புலம்பெயர் உறவுகள் குளிரிலும், பனியிலும் உழைத்து எமது தாயகத்தில் அல்லல்படும் மக்களிற்கும் கல்வி செயல்பாடுகளிற்கும் உதவி வருகின்றனர். அந்த வகையில் இந்த பெரும் உதவியை நல்கிய அன்பருக்கும் அவர் தம் குடும்பத்துக்கும் UF வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.