2022-02-18

கதிரவெளிமுதல் - கரவெட்டிவரை உமா ஜனன தினத்தில் முன்னெடுக்கப்பட்ட நலதிட்டங்கள் !

அமரர் க. உமா மகேஸ்வரன் அவர்களின் 77வது ஜனன தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூக நலதிட்டங்களை உமாமகேஸ்வரன் பவுண்டேசன் முன்னெடுத்திருந்தது. வடகிழக்கு தமிழர் தாயக பகுதியை உள்ளடக்கி பல்வேறு நலதிட்டங்களை உமா மகேஸ்வரன் பவுண்டேசன் பல மாவட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றது.
 
அந்த மாபெரும் தலைவர் எண்ணிய எண்ணங்களை சுமந்தவர்களாக "அற"பணிகளை கையேற்று UF செயற்படுத்தி வருகின்றது, கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு சவால்கள் மத்தியிலும் பல மில்லியன் ரூபாய்கள் திட்டங்களை UF மேற்கொண்டுள்ளது.
 
கல்வி, வாழ்வாதாரம், சுயதொழில் ஊக்குவிப்பு, பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முதியோர் பராமரிப்பு நலன், பெற்றோரை இழந்துள்ள சிறுவர்,சிறுமியர் நலன் என்று பல சுமைகளை சுமந்தே உமா மகேஸ்வரன் பவுண்டேசன் பயணத்தை தொடர்கின்றது.
 
அந்த வகையில் உமாவின் ஜனனதினத்தில் சிறப்பு திட்டத்தின் ஒர் அங்கமாக பெண் தலைமைத்துவ குடும்பத்தின் சுயதொழில் ஊக்குவிப்பாக யாழ் மாவட்டத்தின் கரவெட்டி பிரதேசசபைக்கு உட்பட்ட பெண்ணொருவருக்கு 120,000 ரூபா பெறுமதியான பால் மாடு ஒன்று வழங்கப்பட்டது.
 
இன்று வெள்ளிக்கிழமை(18.02.2022) மேற்படி பெண்ணை தலைமைத்துவமாக கொண்டுள்ள குடும்பத்திற்கான பால்மாடு எமது நிறுவனத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. சிவம் அவர்களால் கையளிக்கப்பட்டது.
 
இந்த பெறுமதிமிக்க திட்டத்திற்கான நிதி அணுசரணையை கனடாவில் வாழும் செல்வம் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். தொடர்ச்சியாக எமக்கு பக்கபலமாக இருந்து எம்மக்களிற்கான மகத்தான பணியை முன்னெடுப்பதற்கு கரம் கொடுத்துவரும் அனைத்து கருணை உள்ளங்களிற்கும் எமது(UF)நன்றிகள். இந்த திட்டத்திற்கான உதவியை நல்கிய திரு.செல்வம் குடும்பத்திற்கும் எமது வாழ்த்துக்களும் நன்றியும்.