2022-03-14

பல்கலை மாணவ, மாணவியருக்கான உமாபுலமை புலமை பரிசில் ஊக்கத்தொகை!

இலங்கையின் பல பல்கலைகழகங்களில் பல்வேறு துறைகளில் பட்டபடிப்பினை மேற்கொண்டுவரும் மாணவ, மாணவியரில் உதவி தேவையுடைய மாணவ, மாணவியரில் 20க்கு மேற்பட்டோருக்கு புலம் பெயர் உறவுகளின் அனுசரணையுடன் “உமாபுலமை பரிசில்” திட்டத்தின் ஊடாக உமாமகேஸ்வரன் பவுண்டேசன் மாதாந்தோறும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றது.
 
மாத்தின் 1ம் திகதியில் இருந்து 15ம் திகதிக்குள் கல்விக்கான உமாபுலமை பரிசில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மார்ச்(2022) மாதத்திற்கான கல்விக்கு கை கொடுக்கும் உமாபுலமை பரிசில் இன்று வழங்கப்பட்டுள்ளது.
 
“கல்வியால் உயர்வோம் வளமான சமூத்தை உருவாக்கிடுவோம்” என்ற சிந்தனையுடன் செயலாற்றிவரும் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் திட்டத்திற்கு கை கொடுத்துவரும் அத்தனை உள்ளங்களுக்கும், பெற்றிடும் உதவியில் பெறுமதிமிக்க பெறுபேற்றின் மூலம் சிறந்த பெறுபேறுகளையும், சான்றிதல்களையும் பெற்று பெருமை சேர்த்திடும் மாணவ மாணவியருக்கும் எமது(UF) நிறுவனத்தின் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.