2022-03-23

சுயதொழில் உதவி கோரல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்துவரும் பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி கோரியுள்ளார்.
 
சமூகத்தின் விடியலுக்காக உழைத்து தனது உடலின் அவையத்தை இழந்துள்ள நிலையிலும், தன்னம்பிக்கையை கைவிட்டு விடாமல் பெரும் வாழ்க்கை போராட்டத்தின் மத்தியில் சிறுபிள்ளைகளான தனது பிள்ளைகளுக்கு “கல்வி” எனும் அறிவையும் ஊட்டி வருகின்றார்.
 
தொடர்ந்து நாட்டில் அதிகரித்து விலைவாசி உயர்வினால் தம்மால் வாழவே முடியாது உள்ளது தயவு கூர்ந்து கருணை உள்ளத்துடன் காருண்யம் காண்பிக்கு மாறும் தமக்கு உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை எனில் தாம் வாழ்வை மாய்த்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கண்ணீருடன் விடுத்த கோரிக்கையை வேதனையுடன் ஏற்று கொண்ட எமது நிறுவனத்தின் பிரதிநிதி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், உங்களது உரிய கோரிக்கைக்கு அமைவாக பெற்றுதர நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
 
யுத்தத்தில் அவையத்தை இழந்த இவ் குடும்ப பெண்ணால் கோழி வளர்ப்பை தவிர வேறு தொழில் தனக்கு தெரியாது என்றும், கோழி வளர்ப்புக்கான உதவியையே கோரியுள்ளர். இவர் முன்னால் போராளியாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடதக்கது. சிறு துளி பெருவெள்ளமாகும் ஒவ்வொருவரும் சிந்தித்தால் முடியாதது என்று எதுவும் இல்லை . சிந்தியுங்கள் உறவுகளே உங்கள் சிந்தனை மாற்றம் அவர்கள் வாழ்வில் சிறப்பினை தோற்றுவிக்கட்டும்.