2022-03-27

வளங்கள் குறைந்த நிலையிலும் வளமான கல்வியை கொடுத்து சிறந்த மாணவனாக்கிய பள்ளி!

மாணவ, மாணவியர் கணிசமான வரவு குறைந்த சில பாடசாலைகளை மூடி வருவதுடன், சில பாடசாலைகளுக்குரிய வளங்களை வழங்குவதிலும் அரசு அசமந்த போக்கினேயே காண்பிக்கின்றது.
 
கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும், கணனி முறை கற்பித்தல், பிரதியெடுத்தல், தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய தட்டச்சுவசதிகள், பிரிண்ட் செய்தல் என்று பல்வேறு இடர்களை பாடசாலை நிர்வாகமும், ஆசிரியர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்.
 
இவ்வாறான நிலையில் நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் பாடசாலையும், மேற்படி நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், எமது நிறுவனமான “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” ஆகிய எமது நிறுவனத்திடம் பாடசாலையின் அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, மேற்படி பாடசாலையின் “கணனி(Computer)”தேவையை லண்டனில் இருந்து அனுசரனையாளர் ஒருவர் வழங்கியிருந்த நிதியுதவில் பாடசாலைக்கான கணனியையும் அவற்றுக்கான உப பொருட்களையும் வழங்கியிருந்தது.
 
இந்த நிலையில், தமது பாடசாலையில் இருந்து மாணவன் ஒருவன் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்ததன் மூலம் பாடசாலைக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் ஊருக்கும், பெருமை தேடி தந்த மாணவனினதும், தலைமை ஆசிரியரான தனது மகிழ்வினையும் பாடசாலை அதிபர் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
 
ஊருக்குள் உள்ள பாடசாலையின், ஆசிரியர்களின் ஆற்றலை உணர்ந்து கொள்ளாமல் நகர புற பாடசாலைகளை நாடி செல்லும் மாணவ, மாணவியருக்கு நீர்வேலி தெற்கு இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று சிறந்த பெறுபேற்றினை பெற்றதன் மூலம் நல்ல செய்தியை சொல்லியுள்ளது.
 
ஊர் பாடசாலைகளிற்கு மாணவ, மாணவியர் வரவு குறைவு காரணமாக பாடசாலைகளை மூடியும், வசதிகளை வழங்காமலும் அரசு, கல்வி திணைக்களம் என்பனதட்டி கழித்து வருகின்றது.
 
நகர்புறம் என்ன ஊர்புறத்திலும் சிறந்த கல்வியை தொடர முடியும் என்பதை ஆசிரியர்கள் நிலைநாட்டியுள்ளனர். ஆசிரியர்களின் முயற்சிக்கு பெற்றோரும் தமது பிள்ளைகளை ஊர் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் அரசு மூடும் பாடசாலைகளை தடுக்க முடியும், வளங்களையும், தேவைகளையும் பாடசாலைக்கு வர செய்திட முடியும்.
 
அரசு அல்லது கல்வி திணைக்களம் செய்துதராத அல்லது நிவர்த்தி செய்யாத தேவையை “உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம்” விடுத்த கோரிக்கையை உடனும் நிவர்த்தி செய்து தந்துள்ள அந்நிறுவனத்தின் செற்பாட்டாளர்களுக்கும் நன்றி கூறி சித்தி பெற்ற மாணவனின் புகைப்படத்துடன் தனது மகிழ்வினை பாடசாலை அதிபர் எம்மிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
 
UF இந்த பணியை முன்னெடுப்பதற்கு ஊக்க சக்திகளாக இருந்த லண்டனை சேர்ந்த அனுசரணையாளருக்கும், திருமதி.ஜே. விஜயா ஆசிரியருக்கும் எமது நிறுவனத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திருசிவம் அவர்களுடன் உதவிய அத்தனை உறவுகளுக்கும் UF நன்றியையும் வாழ்த்துக்களையும் மீண்டும் தெரிவித்து கொள்கின்றது.