2022-04-07

நாவற்குழி கிராமத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கான உதவித்தொகை!

யாழ் மாவட்டத்தின் நாவற்குழி அம்மன் கோயில் வீதி தச்சன் தோப்பு வேலம்பிராய் கிராமத்தில் உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மிகவும் வறுமையிலும் தற்போதைய விலைவாசி உயர்வினால் இன்னல்படும் அப்பகுதி மக்களில் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களில் 16 குடும்பங்களிற்கான ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது.
 
வெளிநாட்டு உதவிகள் ஏதுமற்ற நிலையில் வாடும் மேற்படி மக்களிற்கான உதவி உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை உமாமகேஸ்வரன் பவுண்டேசன் பிரான்ஸ் இணைப்பாளர் திருதிருச்செல்வம் (ஜோன்சன்) வழங்கியிருந்தார்.
 
இன்று வியாழக்கிழமை(07.04.2022)மாலை தச்சன்தோப்பு, கோவிலாக்கண்டி மேற்கு ஸ்ரீசரஸ்வதி சனசமூக நிலையத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தலைவர் திரு. ரதீஸ்வரன் (தீபன்), UF இன் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. சிவம், பிரான்ஸ் இணைப்பாளர் திரு. ஜோன்சன் ஆகியோர் கலந்து கொண்டு நலிவடைந்த குடும்பங்களிற்கான உதவித்தொகையை வழங்கி வைத்தனர்.
 
UFஇனால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் மக்கள் நல திட்டங்களிற்காக ஊக்மளித்துவரும் அத்தனை உறவுகளுக்கும் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.