2022-04-09

கைதடி விழிப்புணர்வற்றோர் இல்லத்திற்கான நிதியுதவியுடன் UF!

யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புணர்வற்றோர் இல்லத்திற்கான நிதியுதவி உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக இன்று சனிக்கிழமை (09.04.2022)வழங்கப்பட்டது. இதற்கான நிதி அனுசரணையை உமா மகேஸ்வரன் பவுண்டேசனின் பிரான்ஸ் இணைப்பாளர் திரு, திருச்செல்வம் ஜோன்சன் அவர்கள் வழங்கியிருந்தார்.
 
இன்று சனிக்கிழமை மேற்படி விழிப்புணர்வற்றோர் இல்லத்திற்கான உதவி வழங்கபட்ட நிகழ்வில், உமா மகேஸ்வரன் பவுண்டேசனின் தலைவர் திரு. ரதீஸ்வரன் (தீபன்), யாழ் மாட்ட UF இணைப்பாளர் திரு. சிவம், UFஇன் பிரான்ஸ் இணைப்பாளர் திரு. ஜோன்சன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி இல்லத்திற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர்.
 
தொடர்ச்சியாக எமது நிறுவனமான UF முன்னெடுத்துவரும் மக்கள் நல திட்டங்களிற்காக தோள் கொடுத்து வரும் அத்தனை உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் UF இன் வாழ்த்துக்களும், நன்றியும்.