2022-04-10

UFஏற்பாட்டில் மாணவியருக்கான கருத்தியல் பட்டறை!

வவுனியா ஹரவப்பொத்தான வீதியில் அமைந்துள்ள “ Royal ஹர்டன் ஹொட்டலில்” மேற்படி நிகழ்வு இன்று ஞாயிற்றுகிழமை(10.04.2022) காலை 10.30 மணி முதல் - 1:00 மணி வரை இடம்பெற்றது. இவ் நிகழ்வில் UF இன் தலைவர் திரு. ரதீஸ்வரன் (தீபன்) செயலாளர் திருமதி ஐஸ்மின் ஹன்றி பெரேரா, உப தலைவர் திரு. கிங்ஸிலி சுவாம்பிள்ளை ரஞ்சன், பொருளாளர் திரு. ரவீந்திரன் (ரவி), UF இன் பிரான்ஸ் இணைப்பாளர் திரு. திருச்செல்வம் ஜோன்சன். மாணவ, மாணவியர் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.
 
மாணவ, மாணவியரின் கல்வி செயல்பாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள் என்ற தமது நிலையை எடுத்து கூறியதுடன். தொடர்ச்சியாக உமா மகேஸ்வரன் பவுண்டேசன் உமா புலமை பரிசில் திட்டத்தின் ஊடாக உதவியை வழங்கி வருவது மட்டுமல்ல எமக்கு வழிகாட்டுதல்களையும் தந்து ஊக்கமளித்து வருவதாகவும் தெரிவித்துள்ள மாணவியர் எம்மை தமது பிள்ளைகள் போன்று அரவணைத்து ஊக்கம் தந்து வருவதுடன் எமது கல்வி நிலையையும் கண்காணித்து வருகின்றனர் என்றும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இங்கு கருத்துரைத்த UF பிரதிகள், எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படும் கற்றல் பட்டறைகள், விழிப்புணர்வு கருத்தாடல்கள் என்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து கல்வி செயற்பாடுகளுக்கு மேலும் ஊக்கமளிக்க எமது நிறுவனம் திட்டமிட்டுள்ளது எனவும் UF பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.
 
இன்றைய கருத்துபட்டறை மிகவும் பயனுள்ளது என மாணவ, மாணவியரும் பெற்றோரும் பாராட்டியதுடன் இவ்வாறான பயனுள்ள பட்டறைகள் நடாத்தப்பட வேண்டும் எனவும், எதிர்காலங்களில் தம்மாலான உதவிகள், பங்களிப்புகளை சமூகத்திற்கு தாமும் வழங்க வேண்டும் என்ற சிந்தனையை தோற்றுவித்துள்ளதாக தெரிவித்து சென்றதையும் காண முடிந்தது. இவ் ஏற்பாடுகளை குறுகிய இடைவெளியில் ஒழுங்கமைத்து செயற்படுத்திய அனைவருக்கும் UFஇன் நன்றியும் வாழ்த்துக்களும்.