2022-04-13

மட்டக்களப்பில் முன்னைநாள் போராளிக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவி!

மட்டக்களப்பு பேத்தாளை பிரதேசத்தை சேர்ந்த முன்ன நாள் போராளியான திரு.எஸ். தியாகராஜா (பவன்) அவர்கள் தனது குடும்ப நிலையை சுட்டிக்காட்டி வறுமையால் வாடுவதாகவும், சுயதொழில் ஒன்றினை செய்து குடும்பத்தினை காப்பாற்றிட மீன்பிடி வலையும், துவிச்சக்கரவண்டி ஒன்றும் வாங்கி தருமாறு உமா மகேஸ்வரன் பவுண்டேசனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அந்த போராளிக்கான சுயதொழில் உதவிப் பொருட்கள் இன்றையதினம் புதன்கிழமை (13.04.2022)வழங்கப்பட்டது.
 
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தலைவர் திரு. ரதீஸ்வரன் தீபன், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கு கொண்ட நிகழ்வில், முன்னைநாள் போராளிக்கான சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்களை சமூக செயற்பாட்டாளரும் மண்முனை மேற்கு பிரதேச பிரதி தவிசாளருமான திரு.பொன்னம்பலம் கேசவன் அவர்களால் வழங்கப்பட்டது.
 
தொடர்ச்சியாக எமது நிறுவனம்(UF) வழங்கி வரும் மக்கள் நல பணிகளிற்கான உதவியை புலம்பெயர் உறவுகளே வழங்கி வருகின்றனர். அவ்வரிசையில் இந்த முன்னை நாள் போராளிக்கான உதவியை புலம்பெயர்ந்தாலும் உள்ளத்தாலும், உணர்வாலும் தாயக நினைவுகளுடனும் எம் உறவுகளின் சிந்தனையுடனும் புலம் பெயர்ந்து பிரித்தானிய தேசத்தில் வாழ்த்து வரும் திரு தயா மையூரன் அவர்கள் நிதி அனுசரணை வழங்கியிருந்தார்.
 
தமது உழைப்பின் சிறுபகுதியை இன்னல்படும் மக்களுக்காக உதவிவரும் உள்ளங்களில் தயாமையூரன் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நலிவடைந்துள்ள நம் மக்களுக்காக வழங்கி வருகின்றார். தொடர்ச்சியாக நல்கிடும் அவர் உள்ளம் போல் என்றும் அவர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அவரும், அவர் குடும்பமும் என்றும் இன்பமாய் வாழ்ந்திட வேண்டும் என UF வாழ்த்துகின்றது.