2022-04-16

மேலும் ஒரு முன்னைநாள் போராளிக்கான சுய தொழில் ஊக்குவிப்பு!!

உமா மகேஸ்வரன் பவுண்டேசன் நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, முன்னைநாள் போராளிகள் சிலருக்கான சுயதொழில் உதவிகள் வழங்கப்பட்டது. முன்னைநாள் போராளிகள் என்பது வரையறுக்கப்பட்ட அமைப்புக்கு மாத்திரம் உடையவர்கள் அல்ல, சமூக விடுதலைக்காக பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் ஊடாக சமூகத்தின் விடியலுக்காக தம்மை அற்பணித்த, உழைத்த அனைவரும் முன்னைநாள் போராளிகள் தான்.
 
கட்சி, அமைப்பு, இயக்க பேதங்களை மறந்து அனைவரும் போராளிகள் என்ற கோட்பாட்டுக்குள் உள்ளடங்குவர். நாம் எந்த போராளியையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை, சமூகத்திற்காக தமது இளமை வாழ்வை தொலைத்த அனைவரும் போராளிகள். நாம் வழங்கும் உதவிகள் யாரை சென்றது என்பதை உதவி வழங்கிய நன்கொடையாளரும் உதவியை பெற்ற பயனாளியும் அறிவர்.
 
அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னை நாள் போராளியான திரு.நாகேந்திரம் நீலன் அவர்களுக்கு 36,000 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள், உபகரணங்கள் வழங்கப்பட்டது. உமா மகேஸ்வரன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் திரு.ந.ரதீஸ்வரன் தீபன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பயனாளிக்கான மூலப்பொருட்களை சமூக செயற்பாட்டாளர் திரு. நிஸ்காந்தராஜா வழங்கி வைத்தார்.
 
எமது (UF)நிறுவனம் வடகிழக்கின் தாயக பகுதியெங்கும் தேவையுடைய, மக்கள், முன்னைநாள் போராளிகள், மாணவ, மாணவியர் என்று பலருக்கும் மக்கள் நலதிட்டங்களை வழங்கி ஊக்குவித்து வருகின்றது. நாம் திரும்ப திரும்ப கூறுவது போன்று எமது வெற்றிகரமான மனித நேய மக்கள் நலபணியின் மூலகர்த்தாக்கள் எமது புலம்பெயர் உறவுகள்.
 
அந்தவகையில் இந்த நிகழ்வுக்கான நிதி அனுசரணையை வழங்கி ஊக்கமளித்தவர் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் திரு. சங்கர் (உரும்பிராய்) அவர்கள். கருணைமிகு இந்த உதவியை நல்கிய திரு. சங்கர் மற்றும் அவர் தம் குடும்பத்துக்கும் எம்மக்களின் சார்பிலும், எமது நிறுவனமான UF சார்பிலும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.