பசியால் வாடிய குடும்பத்தின் துயரநிலை!
ஏழ்மை,போதிய வருமானமின்மை, விலைவாசி உயர்வு போன்ற இன்னொரென்ன காரணங்களால் பிள்ளைகளை வளர்பதற்கும், போதிய கல்வியை கொடுப்பதற்கும் மிகவும் பின் தங்கிய நிலையில் பட்டினியால் வாடிய குடும்பத்துக்கான அவசர உதவியே வழங்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்துவரும் குடும்பத்துக்கான உதவியே இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை (17.0412022) வழங்கப்பட்டது, இவ் நிகழ்வில் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் திரு. ந. ரதீஸ்வரன் தீபன், UF இன் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. சிவம் அவர்களும் பங்குகொண்டு பயனாளிக்கான உதவியை வழங்கி வைத்தனர்.
விபத்து ஒன்றின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியின் துணையே வாழ்க்கை என்ற நிலையில் வாழும் குடும்ப தலைவரான கணவர், சிறுபிள்ளைகள் நால்வருடன் மிகவும் கஸ்ட்ட நிலையில் உள்ளதாகவும் ஒரு நேர உணவுக்கே அவலப்படுகிறோம் என்று தெரிவித்து குடும்ப தலைவி எமது நிறுவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசன் ஆகிய எமது நிறுவனத்திடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த உதவியை ஓர் ஆண்டுக்கு பிள்ளைகள் வளரும் வரையாவது வழங்கி அவர்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பினை வழங்குவது என்று உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தீர்மானித்துள்ளது.
இதற்கான அனுசரணை வழங்க எமது புலம்பெயர் உறவுகள் முன்வந்துள்ளனர். அந்த வகையில் இவர்களுக்கான இருமாத உதவியாக பிரித்தானியாவை சேர்ந்த திரு. தயாமையூரன் 20,000 ரூபா வழங்கியுள்ளார். மிகுதி 10 மாதங்களுக்கான உதவியையும் கனடாவில் வாழும் அன்பர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்.
“பசியறிந்து உதவிடு” என்பது போல் அவர்களது தேவையை அறிந்து உடனும் உதவி செய்த நண்பர் திரு. தயாமையூரன்(London) அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் தொடர்ந்து உதவிட முன்வந்துள்ள கனடா/ Canada வாழ் அன்பருக்கும் எமது மக்கள் சார்பிலும், மேற்படி குடும்பத்தின் சார்பிலும் எமது நிறுவனத்தின் சார்பிலும் நன்றியும், வாழ்த்துக்களும்.