2022-04-21

போராளிக்கான சுயதொழில் ஊக்குவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னைநாள் போராளிகள் சிலருக்கான சுய தொழில் ஊக்குவிப்புகள் உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது. திரு. குணமஸ்தரன் மாறன் என்னும் முன்நாள் போராளி தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை சுட்டிக்காட்டி UF இடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அவர்களது குடும்ப நிலை, பிள்ளைகளின் கல்வி நிலையை கருத்திற்கொண்டு “அவர்கள் உழைப்பில் அவர்கள் வாழ வேண்டும்” என்ற நோக்கில் அவர்களுக்கான சுய தொழில் ஊக்குவிப்பாக மீன்பிடி வலைகள், மூலப்பொருட்கள் வழங்கப்பட்டது.
 
இவருக்கான உதவியை சமூக செயற்பாட்டாள் திரு. முரளி வழங்கி வைத்தார். இவ் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் திரு.ராகவனும், உமா மகேஸ்வரன் பவுண்டேசனின் தலைவர் திரு.ந. ரதீஸ்வரன் தீபன் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர். இந்த போராளிக்கான சுய தொழில் ஊக்குவிப்புக்கான நிதி அனுசரணையை புலம்பெயர்ந்து கனடா நாட்டில் வசித்துவரும் திரு.நிரஞ்சன் அவர்கள் வழங்கியிருந்தார்,இடர் மிகுந்த நேரங்களில் எல்லாம் இன்னல் போக்கும் உள்ளம் படைத்தவர் நிரஞ்சன்.
 
உதவி என்று கோருபவர்களுக்கு தன்னாலான பங்கினை வழங்கி ஊக்கமளித்து வருபவர், தொடர்ச்சியாக எமது (UF)நிறுவனம் முன்னெடுத்து வரும் மக்கள் நல பணிகளுக்கு ஆக்கம், ஊக்கம் உதவிகள் என்று தொடர்ந்தும் உதவி வருகின்றார். கருணை உள்ளத்துடன் உதவிடும் பண்புக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் எம் மக்கள் சார்பாகவும் எமது நிறுவனம் (UF)சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.