2022-06-07

பள்ளி மாணவர்களுக்கான குடிநீர் கோரிக்கை!

யாழ் கைதடி பகுதியில் தரம் ஒன்று முதல் 13 வரை உள்ள பாடசாலையை அண்மித்த பகுதி உவர்நீர் பிரதேசமாக காணப்படுவதால் குடிநீர் இன்றி மாணவ, மாணவியர் அவவதிப்பட்டு வருகின்றனர்.
 
கடந்த காலங்களில் சாவகச்சேரி பிரதேச சபை ஊடாக நீர்வளங்கல் சபையால் வழங்கப்பட்டு வந்த நீர் வினியோகம் தடைப்பட்டுள்ளதால் . பாடசாலைக்கான குடிநீரினை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு பாடசாலை அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதற்கான அனுசரணையை உமா மகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக வழங்குவதற்கு புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் திரு.திருச்செல்வம் அவர்கள் முன்வந்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கைகளை UF முன்னெடுத்து வருகின்றது.