அன்னையின் நினைவு தினத்தை நிற்கதியான முதியோர், சிறுவர்களுடன் நினைவு கூர்ந்த பிள்ளைகள்!
தமிழர் தாயகமான யாழ் உடுப்பிட்டியில் பிறந்து கனடாவில் வாழ்ந்து மறைந்த திருமதி. பத்மாசினி தம்பிராசா (இரத்தினம்)அவர்களின் 31ம் நாள் நினைவுதினம் 07.06.2022 (செவ்வாய்கிழமை) நேற்றைய தினம் நிற்கதியான நிலையில் முதியோர், சிறுவர் இல்லங்களில் வாழும் மூத்தோர், சிறுவர், சிறுமியருடன் நினைவு கூரப்பட்டது.
கனடாவில் வாழ்ந்து வரும் பிள்ளைகளின் அனுசரணையுடன் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக சிவன் முதியோர் இல்லம், சிவன் சிறுவர் இல்லம், அன்பகம் சிறுவர் இல்லம், ஆனந்தா இல்லம் ஆகிய இல்லங்களில் வசித்துவரும் முதியோர், சிறுவர், சிறுமியருடன் இணைந்து 31ம் நாள் நினைவு கூரல் நிறைந்த நிறைவாக இருந்தது.
மேற்படி நிகழ்வை எமது நிறுவனம்(UF) ஊடாக செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்த கனடாவில் வாழும் நண்பர் ரவி அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்வதுடன். திருமதி. பத்மாசினி தம்பிராசா அம்மாவின் ஆத்மா சாந்தியடையவும், பிள்ளைகளுக்கு நல் ஆசிகள் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம். ஓம் சாந்தி
