2022-08-09

முகத்தான் குளம் பாடசாலைக்கான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம்!

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்திற்கு உட்பட்ட முகத்தான்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கான குடிதண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உமா மகேஸ்வரன் பவுண்டேசானால் வழங்கப்பட்டது.
 
பாடசாலை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் சுகாதாரமான குடிதண்ணீர் இன்றி பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தண்ணீரில் கல்சியம் அதிகமாக படிவதால் சிறுநீராக பிரச்சினைகளை மாணவ, மாணவியர் எதிர்கொள்கின்றனர் எனவும் இது குறித்து பல்வேறு தரப்பினரிடம் தொடர்பு கொண்ட போதும் எவரும் செய்தர முன்வராத நிலையில் உமா மகேஸ்வரன் பவுண்டேசனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக செய்து தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று பாடசாலை அதிபர் தெரிவித்த வேண்டுகோளிக்கு அமைவாக மேற்படி பாடசாலைக்கான தேவை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது.
 
பாடசாலை அதிபர் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை(09.08.2022)இடம் பெற்ற நிகழ்வில் UF இன் பிரதான செயற்பாட்டாளரும் யாழ்மாவட்ட இணைப்பாளருமான திரு. சிவம், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மட்டுமல்ல அவர்களிற்கு சுத்தமான, சுகாதாரமான குடிதண்ணீரையும் வழங்க வேண்டும் என்ற எமது நிறுவனத்தின் திட்டத்திற்கு புலம் பெயர் மக்களின் அனுசரனை என்பது அளப்பரியது, அந்த வகையில் மேற்படி பள்ளிக்கான சுத்தமான குடிநீர் திட்டத்திற்கு புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் அன்பர் திரு.ஸ்ரீகாந்தா அவர்கள் வழங்கியிருந்தார்.
 
இப்பெரும் உதவியை நல்கி ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்கிட வேண்டும் என்ற நல்நோக்கில் அவர் வழங்கிய உதவிக்காக அன்பர் ஸ்ரீகாந்தாவுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பாடசாலை சமூகம் சார்பாகவும், UF சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.