2022-08-10

உமாபுலமை திட்டத்துக்கு கிடைத்தது சிறப்பு!

கல்வியால் எழுவோம் வளமான சமூகத்தை உருவாக்கிடுவோம் என்ற திட்டத்தினை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டதே உமா புலமைபரிசில் திட்டமாகும். இந்த திட்டம் உருவாக்கப்பட்டதன் மூலம் பல மாணவ, மாணவியர் பல்வேறு பல்கலை கழகங்களில் கல்லூரிகளில் வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர், சட்டத்தரணி, பொதுமுகாமைத்துவம், ஆசிரியர், கலைதுறை என்று பல்வேறு துறைகளில் உமா புலமை பரிசில் திட்டத்தின் ஊடாக இளங்கலை, முதுகலை பட்ட படிப்புக்களை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.
 
கிடைத்துள்ள கல்விக்கான ஊக்குவிப்பினை பெற்று சிறந்த முறையில் கல்வியை தொடர்ந்து வரும் மாணவ, மாணவியருக்கும் அவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பினை உமா புலமைபரிசில் திட்டத்தின் ஊடாக எமது நிறுவனம் முன்னெடுக்கும் கல்வி திட்டத்திற்கு ஊக்குவிப்பு நல்கும் அனுசரனையாளர்களுக்கும் எமது நிறுவனத்தின் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
 
இன்றை நாள் எம் நிறுவனமான UFஊக்கமளித்து வரும் “உமா புலமைபரிசில்” ஊடாக முன்னெடுக்கும் கல்வி பணிக்கு கிடைத்த காத்திரமான நாளாகும். வவுனியாவை சேர்ந்த செல்வி தவராஜா திவ்யபிரியா சட்டத்துறையில் கல்வியை தொடர்ந்து புதிய சட்டத்தரணியாக இன்றைய தினம் புதன்கிழமை(10.08.2022) பதவியேற்றுள்ளார். இதன் மூலம் நாம் வழங்கிய உமா புலமை பரிசிலுக்கும், பெற்றோருக்கும் பெருமையை தேடி தந்துள்ளார்.
 
சட்டத்துறையில் தனது வாத திறமையால் சிறந்த முறையில் வாதாடி உண்மையும், நேர்மையும் நிலைத்திட உழைக்க வேண்டும், சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நியாயத்தின் அடிப்படையில் குரல் கொடுக்க வேண்டும் என வாழ்த்துகின்றோம்.
 
செல்வி திவ்யா இன்று அடைந்துள்ள பெருமை போன்று உமா புலமை திட்டத்தின் ஊடாக கல்வியை தொடரும் மாணவ, மாணவியரும் பெயரையும், புகளையும் சிகரங்களையும் தொட வேண்டும். வலுவான அறிவுசார் சமூகமாக மாற வேண்டும், எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசனும், உமா புலமைபரிசில் திட்டமும் என்றும் பக்கதுணையாக இருக்கும்.
 
புதிய சட்டத்தரணியாக பரிணமித்துள்ள செல்வி தவராஜா திவ்யபிரியாவின் உமா புலமை பரிசில் திட்டத்திற்கான அனுசரனையை கனடாவில் வசித்துவரும் திரு. முருகேசு கணேசதாசன் (செல்வம்) அவர்கள் நல்கியிருந்தார், இது மட்டுமல்ல மேலும் ஓர் மாணவி யாழ் பல்கலையில் பொதுமுகாமைத்துவ துறையில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கான உமா புலமைபரிசில் திட்டத்திற்கும் தனது மகளின் துணையுடன் அனுசரனை வழங்கி வருகின்றார். செல்வம் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் எமது நிறுவனத்தினதும் மாணவ, மாணவியர் சார்பானதுமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.
 
இந்நிலையில் உமா புலமை பரிசில் திட்டத்திற்கு ஊக்கமளித்துவரும் அத்தனை அனுசரனையாளர்களுக்கும் எமது நிறுவனத்தின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம். “சிறுதுளி பெருவெள்ளமாகும்” என்பது போல் ஒர் இரு மாணவ, மாணவியருடன் தொடங்கப்பட்ட உமா புலமை பரிசில் திட்டம் பல மாணவ, மாணவியர் என்ற நீண்ட பட்டியலுடன் வியாபித்து செல்கின்றது.
 
இவ்வாறான உமாபுலமை பரிசில் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் நீங்களும் ஒருவராக இணைந்து கொள்ளுங்கள். உயர்வான கல்வி சமூகத்தை உருவாக்கி வளம்பிக்க சமூகமாக உயர்ந்திடுவோம்.
 
“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்”