2022-08-07

அன்னையின் நினைவாக ஆதரவற்ற முதியோருக்கு உணவளித்து உளமகிழ்ந்த மகன்!

 
யாழ் கந்தரோடையில் பிறந்து கனடாவில் வாழ்ந்து மறைந்த அன்னை திருமதி. மார்கண்டு சிவகாமியம்மா அவர்களின் 2வது ஆண்டு நினைவுதினத்தில் (05.08.2022) வவுனியாவில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் (சிவன் முதியோர்) இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கான உணவினையும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியிருந்தார்.
 
கடல் கடந்து உலகெங்கும் எம் மக்கள் வியாபித்து இருந்தாலும் தாயகத்தின் கனவுகள், ஏக்கங்களுடன் தான் வாழ்கின்றனர் என்பதற்கு இவ் சிறு சம்பவமும் ஓர் சான்று. அன்னை, தந்தை,உறவுகள் நினைவாகவும், பிறந்தநாள், திருமண நாள் நினைவுகள் என்று தாயகத்தில் வாடும் தம் உறவுகளுடனே நினைவுகளை எம் புலம்பெயர் உறவுகள் மீட்டுவருகின்றனர். அவ்வகையில் கனடாவில் வாழ்ந்து வரும் திரு.மோகன் அவர்கள் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக அன்னையின் சிராத்ததினத்தில் முதியோருக்கு அறம் செய்து அகமகிழ்ந்தார்.
 
மூத்தோர், முதியவர்.தாய், தந்தையருக்கு செய்யும் பணியானது உலகிலே சிறந்த அறப்பணி என்று போற்றப்படுகின்றது. இவ்வாறான அறப்பணிகள் உட்ட பல்வேறு அறபணிகளுக்கு எமது நிறுவனத்தை அணுகி எமக்கு தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் அத்தனை உறவுகளுக்கும் எமது நிறுவனத்தினதும் எம் மக்கள் சார்பான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம். இன்றைய நாளில் முதியோருக்கான தேவைகளை பூர்த்தி செய்த மகன் திரு.மோகன் அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் நல் ஆசிகளும் நல் வாழ்த்துகள் கிடைத்திடட்டும், அன்னை சிவகாமியம்மாவின் ஆத்மா சாந்தியடைந்து அமைதி கொள்ளட்டும் என எம் முதியோர் சார்பாக வேண்டுகிறோம். சாந்தி!சாந்தி!சாந்தி
🙏🙏🙏