2022-10-27
யாழ் பல்கலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் பட்ட படிப்பினை தொடர்ந்து வரும் மாணவர் ஒருவருக்கான உமா புலமை பரிசில் வழங்கப்பட்டது.
தமது குடும்பத்தின் பொருளாதார நிலை குடும்பத்தின் ஏழ்மை நிலையை சுட்டி காட்டி கல்வியை தொடர்வதில் உள்ள நெருக்கடிக்கு அமைவாக செல்வன் விஜயராசா அருள்தாஸ் என்ற மாணவருக்கான உமாபுலமை பரிசில் இன்றைய தினம் வழங்கப்பட்டது. மேற்படி மாணவன் க.பொ.த சாதரதரத்தில் (0/L) 9A என்ற அதிசிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்ததுடன் உயர்தரத்திலும் (A/L) சிறந்த சித்தியடைந்தவர் ஆவார்.
கல்வி ஊக்குவிப்பினை முதன்மையாக கொண்டு செயலாற்றி வரும் எமது நிறுவனம்(UF) வடகிழக்கில் கணிசமான மாணவர்களுக்கான கல்வி திட்டத்தினை உமாபுலமை பரிசில் திட்டத்தின் ஊடாக ஊக்குவித்துவருகின்றது. அவ்வகையில் இன்று வியாழக்கிழமை (27.10.2022) யாழ் கரவெட்டி பிரதேசசபைக்கு உட்பட்ட மண்டான் கிராமத்தில் வசித்துவரும் மேற்படி மாணவருக்கான உமா புலமை பரிசில் திட்டத்திற்கான அனுசரனையை கனடாவில் வசித்துவரும் திருமதி. செல்வமலர் அவர்கள் வழங்கியுள்ளார்.
தொடர்ந்தும் எமது திறுவனம் முன்னெடுத்து வரும் கல்வி பணிகள், ஊக்குவிப்புகள், மக்கள் நல திட்டங்களிற்கு பங்களிப்பு நல்கிவரும் அனைத்து உறவுகளுக்கும் UF இன் நன்றியை தெரிவித்து கொள்வதுடன், மாணவருக்கான உமா புலமை பரிசில் திட்டத்துக்கு அனுசரணை வழங்கிய திருமதி .செல்வமலர் குடும்பத்தாருக்கும் எமது நிறுவனத்தின் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.
“கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.”