2021-02-23

பார்வையற்ற தாயும் புத்திசுவாதீனமுற்ற மகளும் UF அரவணைப்பில் !

வயது முதிர்ந்து  கண்பார்வையற்ற  98 வயது தாயும், புத்திசுவாதீனமுற்ற நிலையில் வாழும் மகளும்  மிகவும்  வறுமையால் அல்லல்பட்டு பசியோடும்  பட்டினியோடும் வாடிய நிலையில் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் கவனத்திற்கு வந்த நிலையில்  "பசி" எனும் துயரை UF போக்கிவைத்தது. 

செட்டிகுளம் பிரதேசத்திற்கு  உட்பட்ட மயில்முட்டகுளம் பகுதியில் வசித்து வரும் இவர்களிற்கான வாழ்வாதார  உதவிகள் இன்றையதினம் செவ்வாய்கிழமை(23.02.2021) UFஇன் செயலாளர்  ஐஸ்மின் ஹென்றி பெரேரா மற்றும் UFதொண்டர்களால் வழங்கப்பட்டது. 

எம்மால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான உதவி திட்டங்களிற்கு என்றுமே எம்முடன் துணை நிற்பவர்கள் எம் புலபெயர் உறவுகள், அவ்வகையில்  பிறந்த தினத்தை முன்னிட்டு சுவிஸ் நாட்டில் வசித்து வரும் திரு.திருமதி. இரதிராஜன் நந்தினி தம்பதியினரே பசியை போக்கிடும் மகத்தான பணிக்கும் கை கொடுத்தனர். 

கணிசமான நிதியை “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்”ஊடாக வழங்கி  வடகிழக்கில் பல மனிதாபிமான பணிகளிற்கு மேற்படி  தம்பதியினரும் தோள் கொடுத்துள்ளனர்.  

புலம் பெயர்த்து வாழ்ந்தாலும் என்றும்  எம் தாயக நினைவுகளுடனும் சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் உறவுகளிற்கு  எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன், பிறந்தநாளை முன்னிட்டு உதவி நல்கிய இரதிராஜன் நந்தினி குடும்பத்தாருக்கும் UF பிறந்தநாள்  வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.

      “தனி ஒருவனுக்கு உணவில்லெயெனில்
  ஜெகத்தினை அழித்திடுவோம்”