2021-02-27
வறுமை நிலையால் கல்வியை தொடர்வதில் இடர்படும் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் தந்துஉதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களிற்கான உபகரணங்கள் உமாமகேஸ்வரன்பவுண்டேசனின் யாழ் மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் திரு.சிவம் அவர்களால் பாடசாலை அதிபரிடம் வழங்கப்பட்டது.
நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களில் சிலரது குடும்ப நிலை மிகவும்கஸ்ரமாகவுள்ளதால் கற்றல் உபகரணங்கள் தந்து உதவுமாறு கோரப்பட்டது.
ஏற்கனவே இப்பாடசாமாணவர்கள் சிலரது கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், மேலும்தேவையுடைய மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (26.02.2021) கையளிக்கப்பட்டது.
இதற்கான நிதி பங்களிப்பினை ஜேர்மன் நாட்டில் வசித்துவரும் விநாசிதம்பி, திருக்குமரன், சிவராஜா போன்ற நல் உள்ளங்கள் நல்லியிருந்தனர். அவர்களிற்கும் அவர்தம் குடும்பத்திற்கும் மாணவ, மாணவியர் சார்பாக UF வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.