2021-02-18

உமாமகேஸ்வரன் ஜனன தினத்தில் வறுத்தலை விளானில் உமாமகேஸ்வரன் பவுண்டேசன்!!

அமரர் உமா மகேஸ்வரன் ஜனன தினத்தில் அவரது சொந்த கிராமமான வறுத்தலைவிளான் மண்ணில் கால்பதித்தது உமா மகேஸ்வரன் பவுண்டேசன். அவ் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சுமார் 30 குடும்பங்கள் வரை வறுமையில் வாடுவதாக “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்”கவனத்திற்கு வந்தது.

வடகிழக்கு தாயக பகுதியெங்கும் உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் UF நிறுவனம், இவ் மக்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு உமா மகேஸ்வரன் ஜனன தினத்தில் இவ்வுதவிகளை அவரது சொந்த கிராமத்தில் வதியும் மக்களின் இடரினை நீக்கிட எண்ணியதன் பிரகாரம் இன்று (18.02.2021) வியாழக்கிழமை எமது நிறுவனத்தின் யாழ் மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் சிவம் அவர்களால் கொடுக்கப்பட்டது.

அவ்வகையில் இவ்வாறான மனிதாபிமான செயற்பாடுகளின் பிரதான அனுசனையாளராக எமது புலம்பெயர் உறவுகளே இருந்து வருகின்றனர். இவ் செயற்பாட்டிற்கும் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வரும் பிரபா, ராஜேந்திரம், தீபன் ஆகியோரின் நிதி பங்களிப்பை நல்கியிருந்தனர்.

உதவி தேவை படும் போது எல்லாம் உதவிடும் உள்ளத்தை கொண்டுள்ள பிரபா, ராஜேந்திரம், தீபன் மற்றும் அவர்தம் குடும்பத்திற்கும் “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்”வாழ்த்துக்களையும் நன்றியையும் எம்முறவுகள் சார்பாக தெரிவித்து கொள்கின்றது.