2021-02-18

வவுனியா சிவன் இல்லத்தில் உமா மகேஸ்வரன் ஜனன தினம் !

அமரர் உமாமகேஸ்வரன் அவர்களின் 76வது ஜனன தினம் வடகிழக்கு தாயக பகுதியில் அமைந்துள்ள சிறுவர் நிலையங்கள், முதியோர் இல்லங்கள், முன்பள்ளிகளில் கொண்டாடப்பட்டது. வவுனியாவில் அமைந்திருக்கும் சிவன் இல்லத்தில் இன்றைய தருணம் உமாமகேஸ்வரன் ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கொவிட்-19 தொற்று காரணமாக வெளியார் செல்ல முடியாத நிலையிலும் உமாவின் ஜனதினத்தில் உணவுண்டு முதியவர்கள் புரிப்படைந்தனர்.

இவ் நிகழ்விற்கு பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டு பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் அன்பர் சாண் பாலா என்பவர் அனுசரனை நல்கியிருந்தார். சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் இவ்வாறான அறப்பணிகள் புரிந்து அகமகிழும் பாலா மற்றும் அவர்தம் குடும்பத்திற்கும் UF வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.