2021-03-13

பல்கலைக்கழக படிப்புக்கான உதவி கோரல்!

பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் கல்வியை தொடர முடியாத நிலையில் ஏழ்மை வாட்டிநிற்கின்றது, இவ்வாறான மாணவர்கள் பலர் எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம் உதவிகோரி நிற்கின்றனர். அவ்வாறு உதவிகோரியவர்களில் 15பேர்வரை பல்கலைக்கழக படிப்புக்கான உதவியை "உமாமகேஸ்வரன் புலமைபரிசில்" திட்டத்தின் ஊடாக பெற்றுவருகின்றனர். இவ்வாறான நிலையில் கல்விக்கு கரம் கொடுத்திடுவோம் என்பதற்கு அமைவாக ஒன்பது மாணவர்களிற்கான உதவியை சுவிஸ்நாட்டில் வசித்துவரும் வர்த்தகர் ஒருவர்  எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக வழங்க முன்வந்துள்ளார். மேலும் ஆறுமாணவர்களிற்கு உதவி தேவைப்படுகின்றது அதில் நீங்களும் ஒருவராகி எமது இளம்சமூகத்தை கல்வியால் உயர்த்திடுவோம், மட்டக்களப்பு, திருகோணாமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்று பல மாவட்டங்களில் இருந்தும் கலை, வர்த்தக, பொறியியல், என்று பல்வேறுதுறைகளிற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களே உதவிகோரி நிற்கின்றனர். நீங்களும் ஒரு கல்விமாகானை உருவாக்கிட எண்ணினால் மேலதிக விபரங்களிற்கு எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசனுடன் தொடர்பு கொள்ளவும்.