2021-03-14
எமது நிறுவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசன் கல்விக்கான உதவி கோரிவரும் மாணவ, மாணவியருக்கான உதவிகளை உமா புலமைபரிசில் திட்டம் என்ற பெயரில் அனுசரணையாளர்களின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை (14.05.2021) மூதூர் சேனையூரில் கல்விக்கு உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு - திருகோணாமலை மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் 9 பேருக்கான உதவிகள் வழங்கப்பட்டது, மாதம் ஒன்றுக்கு 10, 000 ரூபா பெறுமதியான இவ் கல்விக்கான உதவி மாதந்தோறும் பட்டபடிப்பு நிறைவு பெறும்வரைவழங்கப்படவுள்ளது.
மாணவன் ஜீனுஜன் தலைமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில், உமாமகேஸ்வரன் பவுண்டேசன் பொருளாளர் திரு.ரவீந்திரன்(ரவி) , மண்முனை மேற்கு தவிசாளர், பிரதி தவிசாளர் கேசவன், திருமதி. ரவீந்திரன் பெற்றோர், மாணவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மிகப்பெரும் பணியை தனியொருவராக சுவிற்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் வர்த்தகர் திரு.வேந்தன்/ஸ்ரான்லி (இந்தியன் சுப்பர் மாக்கற்)அவர்கள் நல்கியிருந்தார். சிறு தொகையல்ல, பெருந்தொகை நிதியை இந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செய்ய முன்வந்ததை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
உடமை இழந்தோம், உயிரை இழந்தோம், அனைத்தையும் இழந்தோம் கல்வியையும் இழக்கலாமா என்ற வார்த்தைக்கு அமைய கல்வி ஒன்றே எமது சமூகத்திற்கான மூலதனம் என்பதில் தெளிவான நோக்கை கொண்ட செல்வந்தர் திரு.வேந்தன், செய்யும் தொழிலில் மேலும் விருத்தியும் சிறப்பும் பெற்று ஏழை எளிய மக்கள் வாழ்விலும் கல்வியால் உயர எண்ணும் மாணவ, மாணவியர் வாழ்விலும் தங்கள் தயவால் ஒளிவீசட்டும்.
உமா மகேஸ்வரன் பவுண்டேசன் என்ற எமது நிறுவனம் ஊடாக இவ்மிகப் பெரும் செலவில் கல்வி ஊக்குவிப்பினை செய்வதற்கு முன்வந்த தங்களிற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்வதுடன், திரு. வேந்தன் மற்றும் அவர்தம் குடும்பத்தினையும் மாணவ மாணவியர் சார்பாக எமது நிறுவனம் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றது.