2021-03-22

துவிசக்கர வண்டி கோரும் மாணவர்கள்!

பாடசாலை, தனியார் கல்வி  நிலையங்கள் சென்று  கல்வியை  தொடர்வதில் உள்ள போக்குவரத்து இடர்பாடுகளால்  கல்வியை தொடர்வதில்  சிரமங்களை  எதிர்நோக்கும்  மாணவ, மாணவியரின்  வேண்டுகோள். 

தினமும் பாடசாலைக்கு 5-7கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றே கல்வியை தொடர வேண்டிய நிலை,     நீண்ட தூரம் நடந்து செல்வதால்  உடல் சோர்வடைந்து கல்வியில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை.

எனவே  எமது இவ்நிலையை  நிவர்த்தி செய்ய தங்களது நிறுவனமான  உமாமகேஸ்வரன் பவுண்டேசன்  ஊடாக எமது தேவையை  நிவர்த்தி செய்து தாருங்கள் என மட்டக்களப்பு  கொத்தியாபுலை  கலைவாணி  பாடசாலை மாணவ, மாணவியர்  கோரியுள்ளனர்.  

இந்த மாணவர்களின்  “கல்வி” யை ஊக்குவிக்க அவர்கள் கோரியுள்ள  போக்குவரத்து நிலையை நிவர்த்தி செய்ய எண்ணிடும் உள்ளங்கள் எமது (UF)நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.  

சிறு சிறு உதவிகள் பெரும் பெரும்  மாறுதல்களை தோற்றுவிக்கும், ஒர் “துவிச்சக்கர வண்டிக்கு செலவிடும் பணமோ சிறு தொகை ஆனால் நீங்கள் உருவாக்குவதோ சிறந்த கல்வி மகானை” எம் சமூகத்திற்கு  உருவாக்கவுள்ளீர்கள் என்ற நல்நோக்குடன்  உதவிடுவீர்.  

கடுமையான உழைப்பே வறுமையில் இருந்து மீட்கும்  “கல்வி”யே ஆற்றல் அறிவு மிகுந்த சமூகத்தை உருவாக்கும்.