2021-03-26

பெற்றோரை இழந்த மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள்!

முறுகண்டி பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26.03.2021) உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டம் திருமுறுகண்டி இந்து வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பெற்றாரை இழந்த மாணவ, மாணவியருக்கான கற்றல் உபகரணங்களின் தேவைகள் குறித்து பாடசாலை அதிபர் "உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம்" விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மேற்படி மாணவ மாணவியருக்கான கற்றல் உபகரணங்கள் வினியோகிக்கப்பட்டது.
 
பாடசாலை தலைமை ஆசிரியர் திரு. பேரின்பநாதன் தலைமையில் பாடசாலை வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உமா மகேஸ்வரன் பவுண்டேசனின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திருவாளர். சிவம், சமூக செயற்பாட்டாளர் திரு.ரூபன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் என பலரும் கொண்டு சிறப்பித்தனர்.
"கல்வி உயர்வோம்" உயர்த்திடுவோம் என்ற நல்நோக்கத்துடன் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக புலம்பெர் தேசங்களில் வாழும் எமது உறவுகள் பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக நல்கிவருகின்றனர்.
 
அந்த வகையில் சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் வசித்துவரும் திரு.திருமதி.இரதிராஜன் நந்தினி குடும்பத்தினர் பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய உதவியின் தொடர்ச்சியாகவே இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன, அடுத்துவரும் நாட்களிலும் மேலும் சில சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகள் அவர்களது நிதியுதவியுடன் வழங்கப்படவுள்ளது.
 
தமது பிறந்தநாள் மற்றும் நற்காரியங்களிற்காக அள்ளிக்கொட்டி செலவு செய்வோர் மத்தியில், திரு.இரதிராஜன் போன்ற பலர் அவ்வாறான ஆடம்பரங்களை தவிர்த்து அவற்றுக்கு செலவு செய்யும் பணத்தினை இவ்வாறான சமூக பணிகளிற்கு உதவி வருவது பாராட்டுக்குரியது.
புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் சொந்தங்கள் தொடர்ச்சியாக எமக்கு ஊடாக எம் தாயகத்தில் வாழும் எம் உறவுளிற்காக கல்வி, பொருளாதார மேம்பாடு, சுகாதார தேவைகளிற்காக வழங்கிவரும் உதவிகளிற்காக தேவைகளை உடைய எம் மக்களின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Like
 
 
 
Comment