2021-03-30

பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவி!

பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான சுய தொழில் ஊக்குவிப்பு உதவி  இன்றையதினம் உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.
நீண்டகாலமாக கணவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ள நிலையில், வருமானம் எதுவுமின்றி இருபிள்ளைகளுடன் கஸ்ரப்படுவதாகவும் தனக்கு வீட்டுடன் கூடிய விவசாயத்தை செய்வதற்கு உதவினால் நோய்வாய்ப்பட்டுள்ள கணவரையும் பிள்ளைகளையும் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் என தெரிவித்து வவுனியா பாவற்குளம் 9ம் யூனிற்றில் வசித்துவரும் திருமதி.அந்தோனிராசா ஜோன் உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இவ்வுதவி பொருட்கள் கொடுக்கப்பட்டது.
 
குடும்பதலைவர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையிலும் "உழைப்பால் உயர்ந்திடுவோம்" என்ற தன்னம்பிக்கையை இழந்துத விடாமல் மனவுறுதியுடன் வாழும் இவ் குடும்பபெண்ணின் வாழ்வு வளம்பெறவேண்டும் என்ற நல்நோக்கில் இவ்வாறான பெண் தலைமை குடும்பங்களை நடாத்திவருவோரை உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊக்கமளித்து உதவி நல்கிவருகின்றது.
 
அந்த வகையில் இன்றையதினம் செவ்வாய்கிழமை(30.03.2021) உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் செயலாளர் திருமதி.ஜஸ்மின் ஹென்றி பெரோ அவர்களினால் 40,000 ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்கள் மேற்படி குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையை சுவிற்சர்லாந்து நாட்டில் வசித்துவரும் திரு.திருமதி.இரதிராஜன் நந்தினி தம்பதியினர் தமது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய நிதியுதவியில் இருந்து வழங்கப்பட்டது.
 
இவர்களது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதிஅணுசரணையில் ஏற்கனவே பல்வேறு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறான உதவிகளை எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக வழங்க முன்வந்த திரு.திருமதி.இரதிராஜன் நந்தினி தம்பதியினருக்கு எமது(UF) வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
Like
 
 
 
Comment