2021-04-06

சைக்கிள் உதவி கோரும் முல்லை மாவட்ட மாணவ, மாணவியர் !

முல்லைத்தீவு மாவட்டம் சிலாவத்தை, செல்வபுரம், வட்டுவாகல், புதம்வயல், கோவில் குடியிருப்பு, மாஞ்சோலை பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவ, மாணவியர் துவிச்சக்கர வண்டியினை கோரியுள்ளனர்.
 
பாடசாலை செல்வதில் உள்ள போக்குவரத்து இடர்பாடுகளை சுட்டிக்காட்டி தமது கோரிக்கையினை ஏற்று சைக்கிள் தந்து உதவினால் படிப்பில் தாம் இன்னும் முழுமையான கவனத்தை செலுத்தி சிறந்த பெறுபேறுகளை பெற்று கல்வியில் உயர்வை அடையமுடியும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவ மாணவியரின் வேண்டுகோளை நிறைவேற்றிட விரும்பும் உள்ளங்கள் யாரவது எண்ணினால் எமது நிறுவனத்துடன் (உமா மகேஸ்வரன் பவுண்டேசன்) தொடர்பு கொள்ளவும்.
 
கல்வியை கற்றிட எண்ணுவோருக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைப்பதில்லை, வசதியுடையோர் கற்றிட முடிவதில்லை இதுவே நியதி, ஆகவே இந்த நிலையில்தான் வசதி வாய்ப்புகள் குன்றிய மாணவ, மாணவியரின் தேவைகளை கண்டறிந்து உமா மகேஸ்வரன் பவுண்டேசன் செயலாற்றிவருகின்றது.
 
கல்வி விடயத்தில் காத்திரமான பணியை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் எமது நிறுவனம் செய்து வருகின்றது. சிறு சிறு உதவிகளாக எமது உறவுகள் வழங்கி வரும் நன்கொடைகள் பாரிய பணிகளை எம் தேசத்தில் வாடும் உறவுகளுக்காக செய்திட முடியும்.
 
சிந்தியுங்கள் எம் உறவுகளே! சிறந்த கல்விக்கு ஊக்கமளித்து வளம்மிக்க சமூகத்தை உருவாக்கிடுவோம்!