2021-04-07

மாணவ, மாணவியருக்கான 2வது மாதத்திற்கான உமாபுலமைபரிசில்!

கடந்தமாதம் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஊடாக சுவிற்சர்லாந்து நாட்டில் வசித்துவரும் வர்த்தகர் திருவாளர் மகாவேந்தன் மகாராஜா அவர்களின் அணுசரணையில் வழங்கப்பட்ட "உமாமகேஸ்வரன் புலமைபரிசில்" திட்டத்தின் ஏப்பிரல்-2021 மாதத்திற்கான உதவிகள் இன்றையதினம் புதன்கிழமை(07.04.2021) மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பீடு செய்யப்பட்டது.
 
பெருந்தொகை நிதியினை கல்வி வளர்ச்சிக்காக வழங்கி மாணவ, மாணவியரின் எதிர்கால வாழ்வுக்கு சிறந்ததொரு அடித்தளத்தை மேற்கொண்டுள்ளார் வேந்தன்.
மாதந்தோறும் ஒன்பது மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்காக பெருந்தொகை செலவு செய்து வருவது பாராட்டுதலுக்கும் போற்றுதற்கும் உரியது.
வேந்தனின் கல்வி பணிகளை போன்று ஏனையவர்களும் சிறு சிறு பங்களிப்பினை நல்கினால் வலுவான கல்வி சமூகத்தை நம் தேசத்தில் உருவாக்கிட முடியும்.
உமாமகேஸ்வரன் பவுண்டேசன் இதுவரை 20 மாணவர்களிற்கான உமாமகேஸ்வரன் புலமை பரிசிலை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றை யவை"
 
என்ற வாக்குக்கு அமைய ஒரு சமுதாயம் நிறைந்த கல்வி கட்டமைப்பால் மட்டுமே நிலையானதாகவும், பாதுகாப்பானதாகவும், முன்னேறியதாகவும், ஆக்கபூர்வமானதாகவும், நாகரிகம் அடைந்ததாகவும் திகழ முடியும்.
 
அந்தவகையில் "கல்வி" க்காக ஊக்கமளித்து அணுசரணை வழங்குவோர் என்றும் போற்றுதற்குரியவர்கள், எமது நிறுவனமான "உமாமகேஸ்வரன் பவுண்டேசன்" ஊடாக பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டு கல்வியை தொடர்ந்துவரும் மாணவ மாணவியருக்காக அணுசரணை வழங்கிய கொடையாளர்களை மாணவ,மாணவியர் சார்பாக UF நன்றியுடன் பாராட்டி மகிழ்கின்றது.