2021-04-08

வளர்ச்சி நோக்கிய பாதையில் UFஇன் சுய தொழில் ஊக்குவிப்பு!

பச்சிலைப்பள்ளி  பிரதேசபைக்கு உட்பட்ட முன்னை நாள் போராளிகள் குடும்பம்  ஒன்றுக்கு சுவிஸ் நாட்டில் வசித்து வரும்  நன்கொடையாளர்கள் அணுசரணையுடன்  உமா மகேஸ்வரன் பவுண்டேசன் சுய தொழில் ஊக்குவிப்பு உதவியை நல்கியிருந்தது. அந்த உதவியை பெற்று இன்று வீட்டுடன் கூடிய சிறு கடையை தோற்றுவித்து  உழைப்பால் உயர துடிக்கும்  போராளிகள் குடும்பம். 

முயற்சி இருந்தால் உயற்சியை அடையலாம் என்பதற்கு இவர்கள் ஒர் உதாரணம். வழியை தான் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தோற்றுவித்தது, அதனை பின்பற்றி வாழ்க்கையை விருட்சமாக்கி  வாழ்வின் உயரத்தை தொடர்வது அவரவர் ஊக்கம். 

உடலின் ஓர் அவையத்தை இழந்தும் தன்னம்பிக்கையை தொலைத்து விடாத இவ்  சமூக விரும்பிகளான முன்னை நாள் போராளிகள் குடும்பத்திற்கு  உமாமகேஸ்வரன் பவுண்டேசன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.