2021-04-18

உயிருக்கு ஊசலாடும் நிலையிலும் மகளின் பல்கலைக்கழக படிப்புக்கு உதவிகோரும் தாய்!

வவுனியா தோணிக்கல் பகுதியில்  வசித்துவரும் தாய் ஒருவர், மகளின் பல்கலைக்கழக கல்விக்கான உதவியை கோரிநிற்கின்றார். கணவர் 2018ம் ஆண்டு மாரடைப்பினால் இறந்துள்ள நிலையில்இ 2019ம் ஆண்டு முதல்  தானும் புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தமக்கு ஒரு மகன் உட்பட இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மகனுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதி கிடைத்தபோதும் குடும்ப சூழ்நிலையால் பல்கலைக்கழகம் அனுப்ப முடியவில்லை இந்த நிலையில் தற்போது இரண்டாவது மகளுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. மகனின் கல்விக்குதான் எமக்கும் வசதியில்லை உதவிகளும் கிடைக்கவில்லை மகளின் கல்வி நடவடிக்கையை தொடர்வதற்காகவேனும் உதவிபரியுங்கள் என்று கூறி உமாமகேஸ்வரன் பவுண்டேசனிடம் உதவி கோரியுள்ளார். 

கல்விக்கு கரம் கொடுதத்து இவ் பிள்ளைகளின் எதிர்காலம் சுபீட்சமாக அமைந்திடவேண்டும். தந்தையை இழந்தும் தாயும் கொடியநோய்க்கு உட்பட்டு உயிருக்கு போராடிவரும் நிலையில் பிள்ளைகளிற்காவது நல்லதோர் கல்வியை  அவர்களது வாழ்க்கையானது  சுபீட்சமாக அமையவேண்டும் என்ற ஏக்கத்துடன் இவ் உதவியை கோரிநிற்கின்றார்.  தாயினதும் அந்த பிள்ளையினதும் கனவினை நனவாக்கி சொத்துக்களிலேயே அழியாத சொத்தான கல்வியை ஊட்டி அவர்களது வாழ்வில் ஒளிமயமான வாழ்வினை ஏற்படுத்திட  முன்வாருங்கள்.  மேலதிக விபரங்கள்இ தகவல்கள்  தேவையுடையோர் உமாமகேஸ்வரன் பவுண்டேசனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.