2021-04-19

மற்றுமொரு பல்கலைகழக மாணவிக்கான உமா புலமைபரிசில்!

பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கான “உமா புலமைபரிசில்” ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் வசித்து வரும் திரு.திருமதி. தேவுருராசா ராஜினி குடும்பத்தின் அனுசரணையுடன் உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.
 
UF இன் வவுனியாதலைமையகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் செயலாளர் திருமதி. ஹன்றி பெரேரா ஐஸ்மின் அவர்களிடம் இருந்து மாணவி உமா புலமைபரிசிலை பெற்றுக்கொண்டார்.
 
முதற் கொடுப்பனவாக 10,000 ரூபாய்க்கான காசோலையை பெற்று கொண்ட மாணவி, அடுத்த நான்கு ஆண்டுகளிற்கான உமா புலமை பரிசில் ஊக்க தொகையை மாதந்தோறும் வங்கி கணக்கின் ஊடாக பெற்று கொள்வார். கல்வியை ஊக்குவிக்கும் புலமை பரிசில் வழங்கும் நிகழ்வில் மாணவியின் அன்னை திருமதி.சதாசிவம், UF இன் பொருளாளர் ரவி அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
கல்வியை தொடர்வதில் உள்ள பொருளாதார நெருக்கடியையும் குடும்பத்தின் நிலையும் விளக்கி உமா மகேஸ்வரன் பவுண்டேசனிடம் உமா புலமை பரிசிலிற்கு விண்ணப்பித்திருந்தார்.
 
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் கிராமத்தில் வசித்து வரும் மேற்படி மாணவியின் கோரிக்கையை UF, அனுசரணையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு அமைவாக ஜேர்மன் பல்கலைகழகத்தில் கல்வி பயின்று வரும் திரு.திருமதி. தேவுருராசா அவர்களின் அன்பு புதல்வி செல்வி. தாரணிகா அவர்களின் விருப்பத்தின் பெயரில் கல்விக்கான உதவியை நல்குவதற்கு பெற்றோர் முன் வந்திருந்தனர்.
 
தாம் ஒன்று தமது குடும்பம், பிள்ளைகள் கல்வி கற்று அறிவின் உயரத்தை அடைந்தால் போதும் என்று கருதுவோர் மத்தியில், தமது பிள்ளையின் கனவினை, விருப்பத்தினை நிறைவு செய்து கல்விக்காக தாயகத்தில் இன்னல்படும் எம் உறவுகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை உள்ளத்தில் கொண்டு ஊக்கமளித்த திரு.திருமதி. தேவுருராசா குடும்பத்தினருக்கும் விசேடமாக அவர்களது அன்பு புதல்வி செல்வி.தாரணிக்கா அவர்களிற்கும் “உமா புலமை” பரிசிலை பெற்று கொண்ட மாணவி சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தெரிவித்து கொள்கின்றது.