2021-05-01

முல்லைத்தீவு மாவட்டத்தின் மற்றுமொரு மாணவிக்கான உமா புலமைபரிசில்!

கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற தாரக மந்திரத்துடன் இணைந்த உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் “உமா புலமைபரிசில்” உதவி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழ்பல்கலைகழகத்தில் தொழில்நுட்பதுறையில் கல்வி பயின்றுவரும் மாணவிக்கான உமா புலமைபரிசில் ஊக்கத்தொகை இன்றையதினம் சனிக்கிழமை(01.05.2021) வழங்கப்பட்டது.
 
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேரில் வந்து உமா புலமை பரிசிலுக்கான ஊக்க தொகையை பெற்று கொள்ள முடியாத நிலையில் மாணவியின் வங்கிகணக்கில் ரூபா 10,000 வைப்பீடு செய்யப்பட்டது. கல்வியை நிறைவு செய்யும் வரை மாணவிக்கான இந்த உதவி நல்கப்படவுள்ளது.
எமது மாணவ, மாணவியரே எதிர்கால சிற்பிகள். அவர்களை அறிவு ஆற்றல், ஆளுமை கொண்டவர்களாக உருவாக்க வேண்டும் என்ற தூய இலக்கினை கொண்டு எமது நிறுவனம்(UF) செயலாற்றி வருகின்றது.
எமது இவ்வாறான பணிகளிற்கு பிரதான பங்கினை புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகள் செய்து வருகின்றனர். UF தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே கணிசமான திட்டங்களை உமா மகேஸ்வரன் பவுண்டேசன் முன்னெடுத்துள்ளது.
 
இதில் பல்கலைகழக மாணவர்களின் கல்விக்கான “உமா புலமைபரிசில்” முதன்மையானது. அந்த வகையில் இந்த மாணவிக்கான உமா புலமை பரிசிலுக்கான உதவியை லண்டன் இங்கிலாந்தில் வசித்து வரும் எஸ்.எஸ். ராஜா அவர்கள் நல்லியிருந்தார்.
 
கல்வியின் அவசியத்தையும் குடும்ப சூழ்நிலையையும் அறிந்து வழங்கிய அணுசரனைக்காக எஸ்.எஸ் ராஜா அவர்களிற்கும் அவர்தம் குடும்பத்திற்கும் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் மாணவி சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.