2021-05-06
கொரோணா நோய் தொற்று அதிகரித்து வருவதால் எமது(UF) பணியாளர்கள் பயணங்களை மேற்கொள்வது அல்லது பயனாளர்களை சந்திப்பதில் நெருக்கடி நிலை. பல கோரிக்கைகள் தேவைகள் குறித்து எமது உமாமகேஸ்வரன் பவுண்டேசன் நிறுவனத்திற்கு வந்துள்ளபோதும், அதற்குரிய உதவிகளை அணுசரணையாளர்கள் வழங்கியுள்ளபோதும் அவற்றை வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுகின்றது.
சுகாதார நெறிமுறைகளை பின்பற்றவேண்டிய நிலையில் சில பகுதிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையிலும் எமது பணியாளர்களால் செல்லமுடியவில்லை. நிலமை சீரானதும் அல்லது போக்குவரத்து நிலை வழமை நிலைக்கு திரும்பியதும் எமது பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அணுசரணையாளர்களிற்கும், பயனாளர்களிற்கும் தெரிவித்து கொள்கின்றது.