2021-05-30

வாகரை மக்களின் அவசர உதவிகோரல்!

கொரோனா நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக நாட்டில் முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடங்கிய மக்கள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வகையில்  வாகரை வாழ் மக்கள் மிகவும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு வேலைக்கு செல்ல முடியாமலும் வருமானம் எதுவுமின்றி மிகவும் இன்னல்படும் தமக்கு  உலர் உணவு பொருள்களை  வழங்கி உதவிடுமாறு கோரப்பட்டுள்ளது. இவ் மக்களின் நிலையை உணர்ந்து உதவிடும் கருணை உள்ளம் கொண்டோர் எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசனுடன் தொடர்பு கொள்ளவும்.