2021-05-31

கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டுள்ள முல்லை மாவட்ட மக்களிற்கான உலர் உணவுபொதிகள்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கோவில்குடியிருப்பு,செல்வபுரம் பகுதி மக்களிற்கான உலர் உணவு பொதிகள் இன்றையதினம் திங்கள்கிழமை (31.05.2021)உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் அதிகரித்து நாட்டில் முடக்கநிலையை அரசு பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் இன்றியும், வசதியின்றியும் பெருமளவு மக்கள் உணவுதேவைக்கே பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர், இவ் நிலையில் கோவில்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 60 குடும்பங்களிற்கு இவ் உதவிபொருட்கள் கொடுக்கப்பட்டது, முல்லைத்தீவு மாவட்டத்தில் நோய்தொற்று காரணமாக இறுக்கமான நிலை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்த நிலையில் அவ் பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உமாமகேஸ்வரன் பவுண்டேசனின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் அமல் அவர்கள் எடுத்த முயற்சியினால் முன் அனுமதி பெற்றப்பட்டு கிராம சேவகரின் துணையுடன் மக்களிற்கான அவசரகால உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார கட்டுப்பாடுகளிற்கு அமைய எமது பணிகளை நாம் மட்டுப்படுத்தியிருந்தோம், மக்களின் அவலநிலையை உணர்ந்தும், அவசர நிலை கருதி தனது நிலையை பொருட்படுத்தாமல் கோவில்குடியிருப்பு,செல்வபுரம் மக்களிற்கான உதவியை வழங்கி மக்களின் அவலத்தை நிவர்த்தி செய்த UF இணைப்பாளர் அமலுக்கும் அவரது நண்பர்கள் மற்றும் "யங்ஸ்" விளையாட்டு கழகத்திற்கும் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் நிர்வாகம் நன்றியை தெரிவித்து கொள்கின்றது.
 
அத்துடன் மக்களின் அவசர நிலையை உணர்ந்து உடனடியாக நிதி உதவி அணுசரணை வழங்கிய கனடா வாழ் அன்பர்களhன நிரஞ்சன், ராஜ், பிரதீபன், அஜித், அப்பன், சந்திரன், செல்வம்,மணி, விஜி மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர்களிற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.
ஒரு நாளில் ஒரு "கோப்பி"க்கான பணம் என்ற ரீதியில் இவ் உதவிகளை ஒன்றுதிரட்டி மாதாந்தம் உமாமகேஸ்வரன் பவுண்டேசனுக்கு அவர்கள் வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
 
சிறு துளி பெருவெள்ளமாக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்வாறான மனிதபிமான பணிகளிற்கு தொடர்ச்சியாக உதவிவருகின்றனர். இவ்வாறான எமது பணிகளிற்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து தொடர்ச்சியாக உதவிவரும் அனைத்து அன்பு உறவுகளிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எம்மக்களின் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் UF தெரிவித்து கொள்கின்றது.