கதிரவெளி மக்களுக்கான உலர் உணவு வினியோகத்தில் உமாமகேஸ்வரன் பவுண்டேசன்!
கொரோனா நோய்பரவல் முடக்க நிலையால் தொழிலுக்கு சென்று சம்பாதிக்க முடியாமலும் உணவுக்காக அவலப்படும் கதிரவெளி மக்களுக்கான உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(03.06.2021)வழங்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல பணிகளை முன்னெடுத்து வரும் எமது நிறுவனம், அவசரகால உதவிகளாக மிகவும் பின் தங்கிய கிராமங்களை அடையாளம் கண்டு அப்பகுதியில் மேலும் வறுமையில் வாடும் குடும்பங்களை இனம் கண்டு இவ்வாறான அவசர உதவிகளை வழங்கி வழங்கி வருகின்றது.
அவ்வகையில் வாகரை பகுதி UF இன் பிரதி செயற்பாட்டாளர் திருமதி. பத்மராணி அவர்கள் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக உமாமகேஸ்வரன் பவுண்டேசன் உதவியுடன் அப்பகுதி கிராம சேவகரின் ஒத்துளைப்புடன் இப்பணியை முன்னெடுத்திருந்தார்.
இந்த மனிதாபிமான பணியை முன்னெடுப்பதற்கான நிதி அனுசரணையை சுவிஸ் நாட்டில் வசித்துவரும் அன்பர்களான திரு.வசந்தன், திரு.மனோ, திரு.ராசேந்திரம் ஆகியோர் இணைந்து வழங்கியிருந்தனர். தொடர்ச்சியாக இவ்வாறான பல மனிதாபிமான பணிகளிற்கு தொடர்ச்சியாக உதவிவரும் கருணை உள்ளம் கொண்ட இவ்மனிதாபிமான செயற்பாட்டாளர்களை என்றென்றும் நன்றியுடன் நினைவு கொள்கின்றோம்.
நாம் தொடங்கிய பணிகள் சில ஆண்டுகளானாலும் காத்திரமாண பணிகளை முன்னெடுத்துள்ளோம் முன்னெடுத்து வருகின்றோம் இன்னும் சிறப்பாக முன்னெடுப்போம். எமது நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மக்கள் பணிக்கு எமக்கு பக்கதுணையாய் புலம்பெயர் உறவுகளே இருந்து வருகின்றனர்.
இந்த உயரியபணியான பசி போக்கிடும் நிகழ்விற்கு பங்களிப்பு செய்த அன்பர்கள் வசந்தன், ராசேந்திரம், மனோ அவர்களிற்கும் அவர்தம் குடும்பத்திற்கும் எம் மக்கள் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் உமா மகேஸ்வரன் பவுண்டேசன் தெரிவித்து கொள்கின்றது.