2021-06-05

பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கான உலர் உணவு பொதிகள்!

வவுனியா மணிப்புரம், கணேசபுரம், சமளங்குளம் பகுதியில் வாழ்ந்து வரும் பெண் தலைமைதுவ குடும்பங்களிற்கான உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை(05.06.2021)உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.
 
கொரோனா நோய் பரவல் காரணமாக வீட்டிற்குள் முடங்கிய நிலையில் வருமானம் இன்றி இன்னல்படும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களிற்கே இவ்வுதவிகள் கொடுக்கப்பட்டது.
 
எமது செய்திகளில் நாம் குறிப்பிடுவது போன்று இவ் மனிதாபிமான பணிக்கும் புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்துவரும் கருணை உள்ளம் கொண்ட உள்ளங்களே உதவி வருகின்றனர்.
 
இவ்பணிக்கான நிதி உதவியை பிரான்சில் வசித்து வரும் திரு.திருமதி. ரகுபரன் குடும்பத்தினர் நல்கிலிருந்தனர் அவருக்கும் அவர் தம் குடும்பத்துக்கும் பெண் தலைமைத்து குடும்பங்கள் சார்பாக எமது(UF) நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்.