2021-06-06

முல்லைத்தீவில் மூன்றாவது நாளாக தொடரும் உலர் உணவு வினியோகம்!

நாடுதழுவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முடக்கநிலையில் தொழிலுக்கு செல்ல முடியாமலும் வருமானமும் இன்றி இன்னல்படும் மக்களிற்கான உலர் உணவு பொதிகள் மூன்றாவது நாளாக முல்லை மாவட்டத்தின் செல்வபுரம் மக்களிற்கு இன்றையதினம் ஞாயிற்றுகிழமை (06.06.2021)உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.
 
எமது இவ் செயற்பாடுகளை முடக்க நிலையிலும் வெளியே செல்வதற்கே அச்சப்படும் வேளையிலும் கிராம சேவகரின் அனுமதியுடனும் அவரது ஒத்துளைப்புடனும் சிறப்பான பணிகளை முன்னெடுத்து வரும் எமது நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு. அமல் அவர்களின் பணி அளப்பரியது.
 
முடக்க நிலையில் மக்கள் அதிகமாக ஒன்று கூட முடியாத நிலையிலேயே, பகுதி பகுதியாக எமது வினியோக நடவடிக்கைகள் தொடர்கின்றது. இந்த அளப்பரிய பணியை எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசன் முன்னெடுப்பதற்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி வரும் எம் புலம்பெயர் உறவுகளின் ஒத்துளைப்பு அளப்பரியது.
 
புலம்பெயர்ந்து தேசங்கள் கடந்தாலும் தமது குருதி கனதியானது என்பதை உறுதி செய்யும் விதமாக தொடர்ச்சியாக ஊக்கமளித்துவரும் உள்ளங்களை போற்றிடுவோம். அவ்வகையில் இந்த அறபணிக்காக 150,000 ரூபா பணத்தினை உதவிய கனடா வாழ் அன்பு உறவுகளுக்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் எம் மக்கள் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் உமா மகேஸ்வன் பவுண்டேசன் தெரிவித்து கொள்கின்றது.