2021-06-09

ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களிற்கான உலர் உணவு பொதிகள்!

சுகாதார துறையின் முடக்க நிலையால் அவதிப்படும் மற்றும் தனிமைபடுத்தப்பட்டுள்ள மக்களிற்கான உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் புதன்கிழமை(09.06.2021)வவுனியா மாவட்டத்தின் ஈச்சங்குளம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட கோதாண்டர் நொச்சிக்குளம், தரணிக்குளம் பகுதி மக்களிற்கு உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் வழங்கப்பட்டது.
 
அப்பகுதியில் மிகவும் வறுமை நிலையில் வாடிய குடும்பங்களில் அடையாளம் காணப்பட்ட குடும்பங்களில் 22 குடும்பங்களிற்கே அவசர உலர் உணவு பொதிகள் கொடுக்கப்பட்டது.
 
யாழ் பல்கலை கழகத்தின் ஒன்றிய பிரதிநிதி செல்வன் உஜாந்தன் தலைமையில் இடம்பெற்ற செயற்படுத்தலில் உமாமகேஸ்வரன் பவுண்டேசன் பொருளாளர் திரு.ரவீந்திரன் (ரவி) அவர்களும் பங்கு கொண்டு எம் உறவுகளிற்கான உலர் உணவு பொதிகளை வழங்கினர்.
 
22 குடும்பங்களிற்கும் தலா 2000 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கப்பட்டது. இவ் நிகழ்வுக்கும் எமது புலம் பெயர் உறவுகளே ஊக்கமளித்துள்ளனர், ஈச்சன் குளம் கிராம சேவகர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட உலர் உணவு வழங்களுக்கான நிதி அனுசரணையை கனடாவில் வசித்துவரும் திரு. கந்தசாமி கனகசபை அவர்கள் நல்கியிருந்தார்.
 
இவரது சமூகம் மீதான கரிசனையும், பார்வையும் நீண்ட நெடியது. புலம் பெயர்ந்தாலும் எம்மக்கள் மீதான அவரது பரிவு, பாசம், பந்தம் என்று இன்றும் தொடர்கின்றது. இவ்வாறு தான் புலம் பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் கணிசமான எமது உறவுகள் எம்மக்களிற்கான உதவிகளை நல்கி வருகின்றனர்.
தமது குருதி உரப்பானது என்பதை உறுதி செய்துவரும் எம்புலம் பெயர் உறவுகளுக்கும் இவ் உதவியை நல்கிய அன்பர் திரு. கந்தசாமி அவர்களிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் எம்மக்களின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் UF தெரிவித்து கொள்கின்றது.