ஊனமுற்ற முதியவர்களுக்கான உலர் உணவு பொதிகள்!
அசாதாரண சூழ்நிலை காரணமாக பல பாகங்களிலும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து முடக்க நிலையை பிரகடனப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையும், அரசும் பாரிய பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் தொழிலுக்கு செல்ல முடியாமலும் தனிமைபடுத்தப்பட்டுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களிற்கும், அங்கவீனமுற்ற நிலையில் தனிமையில் வாடும் முதியோர், வறுமை, பசியால் வாடும் எம் மக்களிற்கான உதவிகளை புலம்பெயர் தேசங்களில் வாழும் கருணை உள்ளம் கொண்ட உறவுகளின் உதவியுடன் எமது நிறுவனமான உமா மகேஸ்வரன் பவுண்டேசன் முன்னெடுத்து வருகின்றது.
நேற்றைய தினம் வாகரை கதிரவெளியில் முன்னெடுக்கப்பட்ட பணியின் தொடர்ச்சியாக மேலும் சில முதியவர்களிற்கான உலர் உணவு பொதிகள் இன்றைய தினம் செவ்வாய்கிழமை(07.06.2021) வழங்கப்பட்டது. பசி போக்கிடும் பணியின் பெருமைக்குரியவர்கள் நிதியுதவி நல்கிவரும் அனுசரணையாளர்களே.
அந்த உயரிய எண்ணத்தையுடைய நன்கொடையாளர்களிற்கு என்றென்றும் எம் மக்களின் சார்பான நன்றியும் வாழ்த்துக்களும் . இந்த நெருக்கடியிலும் அளப்பரிய பணியாற்றி வரும் செயற்பாட்டாளர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி கூற வேண்டும்.
நேற்றும் இன்றும் இடம்பெறும் பணிகளிற்கு நிதியுதவி நல்கிய பிரித்தானியாவைசேர்ந்த ரையோ(TAYIO) குடும்பத்திற்கும், தொடர்ச்சியாக உதவி நல்கி வரும் புலம் பெயர் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறி கொள்வதுடன் அவர்களிற்கு நல்ல ஆரோக்கியம், நல்லாசிகளும் கிடைத்து நீடித்து வாழ வேண்டும் என UF வாழ்த்துகின்றது.