2021-06-19

விழி நீர் அஞ்சலி!!!

எமது நிறுவனத்திற்கு ஆக்கம், ஊக்கம், அறிவுரை வழங்கி வந்த அன்பான நட்பு ஒன்று மீளாத துயில் கொள்கின்றது. சுமார் 40 ஆண்டுகளிற்கு மேலாக சமூக மேம்பாட்டிற்காக அற்பணிப்புடன் செயலாற்றி வந்த உறவொன்று தனது மூச்சினை நிறுத்தி கொண்டது. ராசா அண்ணர் என்று அழைக்கப்படும் திரு.முருகேசு சத்தியநாதன் என்ற சமூக பற்றாளன், காலனால் காவு கொள்ளப்பட்ட துயர் மிகுந்த செய்தி எம்மை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
எம்மக்கள், எம் இனம் என்ற வாஞ்சையை நெஞ்சிலே சுமந்த வண்ணம் “மக்கள் மக்கள்” என்ற வாசகத்தை உச்சரித்த வண்ணமே இறுதி மூச்சுவரை தனது பயணத்தை தொடர்ந்த நல்லுள்ளம். எமது நிறுவனமான “உமா மகேஸ்வரன் பவுண்டேசனின்” மக்கள் நல பணிகளை கண்டு மனமகிழ்ந்து, அது இன்னும் பல படிகளை தாண்டி பணிகளை செய்ய வேண்டும் என அறிவுரை கூறி ஊக்கமளித்த உன்னத மாந்தர்.
 
கடல் கடந்து கனடா தேசத்தில் இருந்து எமது நிறுவனத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் கருணை உள்ளங்களுடன் இணைந்து இயங்கி வந்த உறவு ஒன்றை காலனிடம் பறிகொடுத்த துயராத வேதனையுடன் துவண்டு போய் நிற்கின்றோம்.
 
எம் அருமை நண்பனே உங்கள் எண்ணங்களையும், நோக்கத்தையும், சிந்தனையும் சுமந்து நாம் தொடர்ந்து பயணிப்போம். அது ஒன்றே நாம் உங்களுக்கு செலுத்தும் ஆத்மாத்தமான அஞ்சலியாக இருக்கும்.
 
சாந்தி! சாந்தி ! சாந்தி!
 
- உமாமகேஸ்வரன் பவுண்டேசன்