2021-06-21

சிறுபிள்ளையின் மருத்துவ தேவைக்கான உதவி UF இனால் வழங்கப்பட்டது!

தமது சிறுபிள்ளையின் வைத்தியசெலவுக்காக உதவி நல்கும்படி திரு.திருமதி.தயாளன் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவ் பிள்ளைக்கான உதவி இன்றையதினம் திங்கள்கிழமை(21.06.2021) சுவிஸில் வாழ்ந்துவரும் திரு.திருமதி. வசந்தன் குடும்பத்தினரின் அனுசரணையுடன் உமாமகேஸ்வரன் பவுண்டேசனால் முன்னெடுக்கப்பட்டது.
 
வவுனியா சின்னப்புதுக்குளம் வீதியில் உள்ள உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அலுவலகத்தில் வைத்து குடும்ப உறுப்பினர் தயாளனிடம் எமது நிறுவனத்தின் பொருளாளர் திரு. ரவீந்திரன்(ரவி) அவர்களினால் 50,000 ரூபாவுக்கான காசோலை கையளிக்கப்பட்டது.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை பகுதியில் வசித்துவரும் இவ் குடும்பம் நிரந்தர வீடோ நிலபுலங்களோ இல்லாத நிலையில் தனியார் ஒருவரின் நிலபரப்பில் அமைந்துள்ள காணியில் அமைந்துள்ள குடிசை ஒன்றிலோ வாழ்ந்து வருகின்றனர். தினசரி தொழிலுக்கு சென்றாலேயே உணவு என்ற வாழ்க்கை நிலையில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று சிறிய குடிசைவீட்டில் வசித்து வருகின்றனர். ஏழ்மை நிலையில் பிள்ளைகளில் ஒன்று சுகயீனமுற்ற நிலையில் வைத்திய தேவைகளை செய்து பிள்ளையை காப்பாற்ற முடியாத நிலையிலேயே உதவி கோரி விணப்பிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை மனிதநேயத்துடன் நோக்கிய திரு.திருமதி.வசந்தன்(சுவிஸ்) குடும்பம் வைத்திய தேவைகளிற்கான 50,000 ரூபா பணத்தினை உமாமகேஸ்வரன் பவுண்டேசன் ஆகிய எமது நிறுவனம் ஊடாக வழங்க முனவந்தனர்.
 
இவ்வாறு வைத்தியதேவை, வாழ்வாதார உதவியென தேடிவருவோருக்கு இல்லையென என்ற வார்த்தையை கூறி "புண்பட்ட உள்ளங்களை புண்படுத்திட கூடாது" என்று மிகப்பெரும் கருணையுடன் பல பணிகளை புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்தாலும் கருணயும் காருண்யமும் காய்ந்துவிடாமல் இன்று தனது உழைப்பின் ஒர்பகுதியை இவ்வாறான அறப்பணிகளிற்கு அள்ளிகொடுத்து ஆனந்தம்கொள்ளும் அன்பர் திரு.திருமதி. வசந்தன் குடும்பத்தினை பாராட்டியே ஆகவேண்டும்.
இவ்வாறான அற பணிகளை உலகில் அனைவரும் செய்திடும் மனம்படைத்தவர்கள் என்று கூறிவிடமுடியாது, பண்பு, பரிவு,கருணை கொண்ட சொற்ப சிலரே நாமும் வாழந்து நால்வரையும் வாழவைப்போம் என்ற தர்ம சிந்தனையுடன் வாழ்கின்றனர், நாம் பாண் சாப்பிட்டால் வசதியில்லாதவருக்கு கஞ்சியாவது ஊற்றிடவேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்கின்றனர்.
 
தமக்கென எதுவும் செய்யாமல்,பிறர்க்கென உழைக்கும்-உதவும் உண்மையான இயல்புடையோர் இன்னமும் இருப்பதாலேதான் இவ்வுலகம் இயங்குகிற தெனச் சொல்கிறது புறநானூற்றுப் பாடல். அத்தகையோர்,தாம் பிறர்க்குச் செய்யும் உதவியால் தமக்கு இப்போதோ, பின்னரோ என்ன பயன் கிடைக்குமென்று அகத்திலேஆராய்ச்சி செய்யாமல், தக்கார்க்குத் தக்க நேரத்தில் தக்க உதவி செய்வது தம் கடமை என்ற கண்ணியமான பண்போடு உதவி செய்வர். ஆழப் பெருங்கடல் தான் சூழ்ந்திருக்கும் தரணிக்கு அளிக்கும் பயன்கள்அளப்பரியன.ஆயினும் எதிர்ப்பயன் எதுவும் எதிர்பாராமல் ஒருவர் செய்யும் உதவியின் பயனளவை விடக் கடல் தரும் பயனளவு குறைந்ததே.ஆம், கடல் கூடத்,தான் மேகத்துக்குத் தந்தநீரைத் திரும்பப் பெறுகிறதே!
 
இவ்வாறான சிந்தனை கொண்ட சிலரின் அன்பர் வசந்தன் என்ற அன்பரும் ஒருவர், அவரது வாழ்வில் என்றும் வசந்தம் வீசவேண்டும் இன்னும் பல தான தர்மங்களை வழங்கி ஏளை எழிய மக்களின் வாழ்விலும் மலர்ச்சியை ஏற்றிடவேண்டும், கருணையுடன் கைகொடுக்கும் அவருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் எம்மக்கள் சார்பாக உமாமகேஸ்வரன் பவுண்டேசன் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.
 
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது"