வேலங்குளம், கோவில் மோட்டை கிராமங்களிற்கான கொவிட்-19 உலர் உணவு வினியோகம்!
இன்றையதினம் வெள்ளிக்கிழமை(25.06.2021)வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வேலங்குளம், கோவில்மோட்டை கிராமங்களில் வதியும் மக்களிற்கான கொவிட்-19 உலர் உணவு வினியோகம் உமா மகேஸ்வரன் பவுண்டேசனால் முன்னெடுக்கப்பட்டது.
வேலங்குளம் கோவில்மோட்டை இளைஞர் விளையாட்டு கழக மண்டபத்தில் இடம்பெற்ற உலர் உணவு வழங்கும் நிகழ்வில், உமா மகேஸ்வரன் பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான திருமதி. ஹென்றி பெரோ ஐஸ்மின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் திரு.குகன் ஆகியோர் கலந்து கொண்டு உணவு தேவையுடைய மக்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
எம் தேசத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால் தமது பூர்வீக கிராமங்களை விட்டு வெளியேறி தற்போது மீன் குடியேறி வருபவர்களே மேற்படி கிராமமக்கள், இந்நிலையில் வருமானங்களோ, வசதி வாய்ப்புகளோ, தொழில் வாய்ப்புகள் எதுவுமற்ற நிலையில் கொவிட் - 19 தொற்று காரணமாக வெளியே சென்று வேலைகள் செய்யவோ வருமானத்தை ஈட்டவோ முடியாத நிலையில் உணவுக்காக துன்பமுற்ற நிலையில் வாடிய 21 குடும்பங்களிற்கு 1500 ரூபா பெறுமதியான உலர்வு உணவு பொதிகளை வழங்கியதன் ஊடாக அம்மக்களின் பசியை போக்கியது UF நிறுவனம்.
எமது மக்களையும், மாணவர்களையும் காத்திடும் எமது(UF)நிறுவனத்தின் காத்திரமான பணிக்கு கை கொடுத்து வருபவர்கள் புலம்பெயர் உறவுகளே, அவ்வகையில் இன்றைய மனிதாபிமான பணிக்கு கை கொடுத்தவர்கள் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் திரு.மணியம் குடும்பத்தினர்.
தேசங்கள் கடந்தாலும் தளராத உள்ளத்துடன் உதவிவரும் அன்பர் மணியம் மற்றும் அவர் தம் குடும்பத்துக்கும் எம்மக்கள் சார்பாக எமது நிறுவனமான உமாமகேஸ்வரன் பவுண்டேசன் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.