2021-07-01

யாழ் பல்கலைகழக மாணவிக்கான உமா புலமை பரிசில்!

யாழ் பல்கலை கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி பயின்றுவரும் மாணவிக்கான உமாபரிசில் திட்டத்தின் ஊக்கத்தொகை இன்றையதினம் UF இன் பொருளாளர் திரு.ரவீந்திரன் (ரவி) அவர்களிடம் இருந்து மாணவி பெற்றுக்கொண்டார்.
 
வவுனியாவில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் பவுண்டேசன் அலுவலகத்தில் வைத்து மாணவிக்கான உமாபுலமை பரிசில் வழங்கப்பட்டது. கடந்த மே மாதம், முதல் மாதத்திற்கான ஊக்கத்தொகையை பெற்று கொண்ட போதும், யூன் மாதத்திற்குரிய உதவியை கொவிட்-19 முடக்க நிலையால் வந்து பெற்று கொள்வதில் தாமதம் ஏற்பட்டு தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை (01.07.2021) பெற்றுக்கொண்டார்.
 
இனிவரும் காலங்களில் அவருக்குரிய ஊக்கத்தொகை மாணவிக்கு உரிய நேரத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கல்வியால் எழுவோம்” ஆற்றல் மிக்க அறிவாற்றல் மூலம் ஆழமான வலிமை மிக்க சமூகத்தை கட்டியமைப்போம் என்ற இலட்சிய கனவுடன் எமது நிறுவனமான UF செயலாற்றி வருகின்றது.
அந்த வகையில் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்தாலும் தாயகத்து நினைவுகளையும், சுமைகளையும் சுமந்தவர்களாக எம் உறவுகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களது எண்ணங்களும் நோக்கங்களும் எம் தேசத்தில் வாழும் உறவுகளை அறிவினாலும், பொருளாதார வளர்ச்சியினால் சிறந்ததொரு வலுவான சமூகத்தை கட்டியமைத்திட வேண்டும் என்பதுவே, அந்த நல் உள்ளங்களின் உதவியினால் மேற்கொள்ளப்படுவதே உமா புலமை பரிசில் திட்டமாகும்.
 
எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான உதவி திட்டங்களிற்கு புலம் பெயர் உறவுகளே ஊக்கமளித்து வருகின்றனர். இன்றைய இவ் மாணவிக்கான உமா புலமை பரிசில் ஊக்கத்தொகை பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வசித்துவரும் திரு. எஸ்.எஸ்.ராஜா அவர்களின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
எதிர்காலத்தின் சிறந்ததொரு அறிவியல் மேதையை உருவாக்கும் திட்டத்திற்கு ஊக்கமளித்துவரும் திரு. எஸ். எஸ். ராஜா அவர்களிற்கும் அவர் தம் குடும்பத்திற்கும் எம்மாணவ, மாணவியர் சார்பாகவும் எமது நிறுவனம் சார்பாகவும் வாழ்த்துக்களையும்
நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.