2021-07-08

உள்ளக கற்றல் நடவடிக்கைகள் முடங்கிய நிலையிலும் பல்கலைகழக மாணவ, மாணவியருக்கான UF இன் (உமா புலமை பரிசில்) ஊக்க தொகை தொடர்கின்றது!

பல்கலைகழக மாணவ மாணவியருக்கான “உமா புலமை பரிசில்” திட்டத்தின் யூன், யூலை மாதங்களிற்கான ஊக்கத் தொகை இன்றைய தினம் வியாழக்கிழமை(08.07.2021)வைப்பீடு செய்யப்பட்டது. கொவிட்-19 காரணமாக பல்கலைகழக உள்ளக கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு ஒன்லைன் மூலம் இடம் பெற்று வரும் நிலையில் மாணவர்கள் வீடுகளில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ் நிலையிலும் மாணவ, மாணவியரின் குடும்ப நிலை காரணமாக அவர்களிற்கான ஊக்கத் தொகை இன்றைய தினம் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 
கிழக்கு மாகணத்தின் மட்டக்களப்பு வாகரை, வெருகல், கதிரவெளி, மூதூர் பிரதேசங்களை சேர்ந்த ஒன்பது மாணவ, மாணவியருக்கான உமா புலமை பரிசில் திட்டத்திற்கு சுவிஸில் வாழ்ந்துவரும் வர்த்தகரான திரு. மகாவேந்தன் அவர்கள் அனுசரனை வழங்கி வருவது அறிந்ததே. மாணவ, மாணவியர் வீடுகளில் இருந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அவர்களது குடும்ப நிலையை கருதி யூன், யூலை மாதங்களிற்கான இரு மாதங்களிற்கும் 20,000 ரூபா என்ற அடிப்படையில் 180,000 வைப்பீடு செய்யப்பட்டது. இவ்வாறு உமா புலமை பரிசில் பெற்றுவரும் ஏனைய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
எம் மாணவ மாணவியரின் கல்வி செயற்பாடுகளிற்காக தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வரும் அனைத்து நன்கொடையாளர்களுக்கும் மீண்டும் UF வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றது.